தமிழகத்தில் 1970-ம் ஆண்டு வருவாய்த் துறை ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு நீர்நிலைகள் பரப்பளவை கணக்கெடுப்பு நடத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தென்னிந்தியாவில் பிற மாநிலங்களைவிட தமிழகத்தின் புவியியல் அமைப்பு சற்று மாறுபட்டது. தக்காணப் பீடபூமியின் விரிவாக்கமாக தமிழகம் கடலை நோக்கி மேற்கில் இருந்து கிழக்காக சரிந்து காணப்படுகிறது. மேற்கில் இருந்துகிழக்கு நோக்கி ஓடும் 7 பெரியநதிகளும், அதனை இணைக்கும் சிறு சிறு ஓடைகளும், கால்வாய்களும் சரிவுகளுடன் முறையற்று அமைந்துள்ளன.
இதனால், மேட்டுப் பகுதியி லிருந்து பள்ளமான பகுதியை நோக்கி ஓடி வரும் மழைநீர் ஆங்காங்கே தேங்கி அனைத்துநிலப்பரப்புக்கும் நீர்செறிவூட்டுவதற்காக பண்டைய அரசர்களும், முன்னோர்களும் ஒரு ஏக்கர் முதல் அதிகபட்சம் 1,700 ஏக்கர் அளவில் குளங்கள், கண்மாய் மற்றும் ஏரிகளை அமைத்தனர்.
கடந்த 50 ஆண்டுகளாக மக்கள்தொகை பெருக்கம், நகரமயமாக்கத்தின் காரணமாக நீர்நிலைகள், மரங்கள் அதிக அளவு அழிக்கப்பட்டன. சென்னையில் 36 ஏரிகள்இன்று இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிட்டன.
மதுரை நகருக்குள் மட்டும் 25-க்கும் மேற்பட்ட குளங்கள் இருந்துள்ளன. அவற்றில் முக்கியமான தல்லாகுளத்தில் மாநகராட்சி அலுவலகம், சட்டக் கல்லூரி, வணிகவரித் துறை அலுவலகம், வேளாண்மை துறை அலுவலகம், ஈகோ பார்க் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. பீபிகுள மாக இருந்த பகுதியில், சுங்க இலாகா, வருமானவரித் துறை, பிஎஸ்என்எல், தபால் துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
செங்குளம் கண்மாயில் மாவட்ட கோர்ட், அரசு போக்குவரத்து டெப்போக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உலகநேரி கண்மாய்பகுதியில் உயர் நீதிமன்றம் கட்டிடம் உருவானது. அனுப்பானடி, வில்லாபுரம் பெரிய கண்மாய் வீட்டுவசதி வாரிய கட்டிடங்களாகிவிட்டன.
அரசுத் துறை அலுவலக கட்டிடங்களால் கண்மாய்கள் அழிக்கப்பட்டது ஒருபுறமிருக்க, கண்மாய், குளங்கள், வரத்து கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டியுள்ள தனியார்களாலும் பல இடங்களில் நீர்நிலைகள் இருந்த தடம் தெரியாமல் மறைந்துவிட்டன. குறைந்தபட்சம் தனியாரிடம் சிக்கியுள்ள நீர்நிலைகளை மீட்டு மீண்டும் தண்ணீர் சேமித்தால்தான் எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க முடியும்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழக அரசின் நீர் பாதுகாப்பு சட்டங்களில் பல்வேறு வகையிலான பாதுகாப்புகள் இருந்தபோதும் அத்தனையையும் மீறி பலஇடங்களில் உள்ள குளங்கள் அரசின் பல்வேறு திட்டப்பணிகளுக்காகவும் கட்டுமானங்களுக்காகவும், மக்களின் வசதிக்காகவும் அழிக்கப்பட்டுவிட்டன. அதனால், இப்பகுதியில் பெய்யும் மழைநீர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அக்குளத்தின் பரப்பை சுற்றி தேங்கி நின்று வெள்ளம் ஏற்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
தமிழகத்தில் தற்போது நிலவும் வறட்சிக்கு முதன்மைக் காரணம், சரிவில் அமைந்த முக்கிய குளங்கள் அழிக்கப்பட்டதும், அவற்றை இணைக்கும் கால்வாய்கள் மூடப் பட்டதே ஆகும்.
பொதுவாக 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், அவற்றின் நீர்வரத்து கால்வாய்கள் கணக்கெடுக்கப்படும். இதில், நீர்நிலைகளின் மொத்த கொள்ளளவு, சுற்றளவு குறிப்பிடப்படும். கடைசியாக2000-ம் ஆண்டு இந்த கணக்கெடுப்பு நடந்தது. ஆனால், அரசும், தனியாரும் ஆக்கிரமித்த நீர்நிலைகளை விட்டுவிட்டே இந்த கணக்கெடுப்பு நடந்தது.
எனவே, நீர்நிலைகள், நீர் வரத்து கால்வாய்களுடைய நீளம், அகலம், கொள்ளளவு கடந்த 1970-ம் ஆண்டு வருவாய்த் துறை கணக்கெடுப்பில் உள்ள ஆதாரத்தின் அடிப்படையில் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
12 hours ago