மத்திய அரசு அனுமதி கிடைத்ததும் தனிநபர் காப்பீட்டுத் திட்டம்: தமிழக வேளாண்மைத் துறை தகவல்

மத்திய அரசு அனுமதி கிடைத்ததும் தமிழகத்தில் தனிநபர் பயிர்க் காப்பீட்டுத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ அப்பாவுக்கு வேளாண் மைத்துறை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

அப்பாவு உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மனுதாரின் கோரிக்கையை 2 மாதத்துக்குள் பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற முதல் டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டிருந்தது. அதன்படி மேற்கண்ட தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

“தற்போதுள்ள தேசிய விவசாய பயிர்க் காப்பீட்டுத் திட்ட மும், சீரமைக்கப்பட்ட தேசிய விவசாய பயிர்க் காப்பீட்டுத் திட்டமும் விவசாயிகளுக்கு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. சுமார் 15 ஆயிரம் எக்டேர் அளவுக்கு முழுவதுமாக பாதிப்பு ஏற்பட்டால் தான் பயிர் இழப்பீட்டுத் தொகை தரப்படுகிறது. தனிப்பட்ட விவசாயி களுக்கு பயிர் இழப்பு ஏற்பட்டால் இழப்பீடு வழங்கப்படுவதில்லை. எனவே, பயிர் காப்பீட்டுத் திட்டத்தை மறுஆய்வு செய்து, புயல், மழை, வறட்சி மற்றும் நோய் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படும் போது அதிலிருந்து மீள்வதற்கு தனிநபர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண் டும். இதனால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தடுக்கப்படுவதுடன், விவசாயமும் செழித்தோங்கும்.

இந்த கோரிக்கையை தமிழக அரசு தலைமை செயலாளர் மற்றும் வேளாண்மைத்துறை செய லாளரிடம் மனுவாகக்கொடுத்தேன். எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப் படவில்லை. எனவே, தனிநபர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும்” என்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அப்பாவு கூறியிருந்தார்.

சென்னை உயர்நீதிமன்ற முதல் டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து, மனுதாரரின் கோரிக்கையை 2 மாதத்துக்குள் பரிசீலிக்க வேண்டுமென உத்தர விட்டது. அதன்பேரில் வேளாண் மைத்துறை இயக்குநர், அப்பா வுக்கு அனுப்பியுள்ள செய்தியில், “2012-13-ம் ஆண்டே முன்னோடித் திட்டமாக தமிழகத்தில் தனிநபர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடை முறைகள் மேம்படுத்தப் பட்டன. மத்திய அரசு அனுமதி கிடைத்ததும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE