வாழ்வளிக்காத விலையில்லா ஆடுகள்!

By ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி மாவட்டத்தில் பருவநிலை, தட்பவெப்பம் காரணமாக அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச ஆடுகள் மற்றும் கோழிகள் மடிந்து வருகின்றன. பயனாளிகளுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் என்று  எதிர்பார்க்கப்பட்ட இந்த திட்டம், தங்களுக்கு  கை கொடுக்கவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.

ஏழைகளுக்கான விலையில்லா கறவை மாடுகள் மற்றும் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், ஊரக புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1.10 கோடி மதிப்பில் ஆடுகள் , மாடுகள், கோழிகள் வழங்கப்பட்டுள்ளன.

நீலகிரி  மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை மூலம் கோழிப்பண்ணைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கோத்தகிரி வட்டத்துக்கு உட்பட்ட கோத்திமுக்கு, கரிக்கையூர், பங்களாப்படிகை மற்றும் திருச்சிக்கடியில் நான்கு சங்கங்கள் அமைத்து, அனைத்து பழங்குடி கிராமங்களையும் இணைத்து கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட்டு, கோழிப்பண்ணையும் அமைக்கப்பட்டது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறும்போது,

“நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் வட்டங்களில் உள்ள பழங்குடியினர்,  தினக் கூலிகளாவே வாழ்ந்து வருகின்றனர். இவர்களது  வாழ்வாதாரத்தை மேம்படுத்த, கூட்டுறவு சங்கங்களை உருவாக்கி வருகிறோம். இதில், அனைத்து பழங்குடியினர் குடும்பத்தினர் உறுப்பினர்களாக சேர வேண்டும். இந்த சங்கங்கள் மூலம் கோழிப் பண்ணைகள்  மற்றும் மாட்டுப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோத்தகிரி அருகேயுள்ள கோத்திமுக்கு, கரிக்கையூர், பங்களாப்படி சங்கங்களுக்கு 250 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு, ஆதிதிராவிட நலத் துறை மூலம் ரூ.19 லட்சத்தில் கோழிப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில், கோழி வளர்ப்பு கொட்டகைகள் ரூ.84.40 லட்சம்  மதிப்பில் உள்ளூர் மக்கள் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டன.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களில், ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 200 பயனாளிகள் வீதம் 800 பேர் தேர்வு செய்யப்பட்டு, கோழிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது”  என்றார்.

தாக்குப் பிடிக்காத கால்நடைகள்!

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தின் காலநிலையைத் தாக்குப் பிடிக்க முடியாமல்,  அரசு வழங்கிய கோழிகள் மற்றும் ஆடுகள் மடிந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர் பயனாளிகள்.

அவர்கள் கூறும்போது, “நீலகிரியின் காலநிலையைக் கருத்தில் கொள்ளாமல்,  இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 450 பயனாளிகளுக்கு, தலா 4 ஆடுகள் வீதம் வழங்கப்பட்டன. மேலும், ஒரு பயனாளிகளுக்கு 50 கோழிகள் வீதம் தற்போது வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதேபோல, பழங்குடியினர் நலத் துறை சார்பில்,  மலைவாழ் மக்களுக்கு கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.  கடந்த காலங்களில் வழங்கப்பட்ட, 70-க்கும் மேற்பட்ட  கறவைமாடுகள், இங்குள்ள தட்பவெப்ப நிலையைத் தாங்க முடியாமலும், போதிய உணவு இல்லாமலும் உயிரிழந்துள்ளன.

எனவே, கால்நடை மற்றும் ஆடுகளின் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில், இந்த திட்டத்திலிருந்து நீலகிரி மாவட்டத்துக்கு விலக்களித்து, பயனள்ள வேறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

மேலும், தற்போது வழங்கப்பட்டு வரும் கோழிகளும்,  இங்கு நிலவும் குளிரைத் தாங்க முடியாமல்,  தொடர்ந்து பல்வேறு நோய்த்  தாக்குதலுக்கு உள்ளாகி, உயிரிழந்து வருவது தொடர்கிறது. கால்நடைகளை கவனிக்க கால்நடைப் பராமரிப்புத் துறையில் போதுமான மருத்துவர்களும் இல்லை. இணை இயக்குநர் பதவியும் காலியாக உள்ளது” என்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஆடு மற்றும் கோழிகள் வழங்கும் திட்டம் முற்றிலும் தோல்வியடைந்து விட்டதாக குற்றம்சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அவர்கள் கூறும்போது,  “நடப்பாண்டில் புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டம் மூலம் 800 பயனாளிகளுக்கு, தலா 50 கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல, ஒருவருக்கு 4 ஆடுகள் என 450 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இவற்றில் தற்போது 50 சதவீத கால்நடைகள் மட்டுமே உயிருடன் உள்ளன. மீதமிருந்த கால்நடைகள் உயிரிழந்து விட்டன.

நீலகிரி மாவட்டத்தின் காலநிலைக்கு, உள்ளூர் இன கால்நடைகள்தான் தாக்குப்பிடிக்கும். ஆனால், கமிஷனுக்காக வெளியூர் இன கால்நடைகள் வழங்கப்படுகின்றன. கால்நடை பராமரிப்புத் துறையினர் தவறான தகவல்களை அரசுக்குத் தெரிவிக்கின்றனர்.

எனவே, கால்நடைப் பராமரிப்பு துறை அல்லாத அதிகாரியை நியமித்து, நீலகிரி மாவட்டத்தில் கடந்த 8ஆண்டுகளில் வழங்கப்பட்ட கால்நடைகளின் தற்போதைய நிலைமை குறித்தும், அவை மக்களுக்கு எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருந்தது என்பது குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த விவகாரத்தை அரசு கருத்தில்கொண்டு,  நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் ரக ஆடுகள் மற்றும் கோழிகள் வழங்க உத்தரவிட வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்