மணல் திருட்டு, கர்நாடகா கட்டிய அணைகளால் கிருஷ்ணகிரி அருகே பாறைகளாக காட்சியளிக்கும் மார்க்கண்டேய நதி: மழைநீரை சேமிக்க தடுப்பணைகள் கட்ட கோரிக்கை

By எஸ்.கே.ரமேஷ்

கர்நாடகா மாநில எல்லையான முத்தியால்மடுகு என்ற மலைப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறு, சிறு ஓடைகள் சேர்ந்து மார்க்கண் டேய நதி உருவாகிறது. இந்த ஆற்றில், திம்மம்மா ஏரியில் இருந்து வரும் தண்ணீரும் கலக் கிறது. ஆற்றில் வரும் தண்ணீர், தீர்த்தம், பாலனப்பள்ளி, சிங்கரிப்பள்ளி வழியாக மாரசந் திரம் தடுப்பணையை வந்தடை யும். இந்த தடுப்பணை வழியாக தேசிய நெடுஞ் சாலையைக் கடந்து செல்லும் மார்க்கண்டேய நதி தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது.

மாரசந்திரம் தடுப்பணை யில் இருந்து கால்வாய் வழியாக வெளியேறும் தண்ணீர் மாரசந்திரம், ஜீனூர், கொரல்நத்தம், ஜிங்கலூர், வீரோஜிபள்ளி, நெடுமருதி, திப்பனப்பள்ளி, பண்டப்பள்ளி, கொத்தூர், தளவாப்பள்ளி, குந்தாரப்பள்ளி, சாமந்த மலை வழியாக கல்லுக்குறி வந்து கிருஷ்ணகிரி படேதலாவ் ஏரியை (பெரிய ஏரி) வந்தடைகிறது. இங்கிருந்து பர்கூர் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

மார்க்கண்டேய நதி மூலம் மாரசந்திரம், ஜீனூர், தளவாப்பள்ளி, குந்தாரப்பள்ளி உள்ளிட்ட கரையோரப் பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மார்க்கண்டேய நதி நீரைப் பயன்படுத்தி நெல், கரும்பு போன்ற பயிர்களை இப்பகுதி விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 2 ஆண்டு களுக்கு முன்னர் மார்க்கண் டேய நதியில் அதிகளவில் தண்ணீர் வந்தது. இதனால் மாரசந்திரம் தடுப்பணை வழியாக படேதலாவ் ஏரிக்கு தண்ணீர் சென்று நிரம்பியது. இதன் பின்னர் பருவ மழை பொய்த்ததால், தற் போது மார்க்கண்டேய நதி நீர்வரத்து இன்றி பாறைகளாக காட்சியளிக்கிறது.

இதுதொடர்பாக விவசாயி கள் சிலர் கூறும்போது, ‘‘கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேப்பனப்பள்ளி அருகே கர்நாடக எல்லைப் பகுதியில் அம்மாநில அரசு தடுப்பணைகள் கட்டியதாலும், மார்க்கண்டேய நதியில் அதிகளவில் மணல் எடுக்கப்பட்டதாலும் ஆறு பாறைகளாக காட்சியளிக் கிறது. ஆற்றை ஒட்டிய பகுதி களில் நிலத்தடி நீர்மட்ட மும் சரிந்துள்ளது. மழைக் காலங்களில் தண்ணீரை சேமிக்கும் வகையில் மார்க்கண் டேய நதியில் சிறு தடுப்பணை கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்