விருதுநகரில் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண்ணின் இரு கால்களும் துண்டானது.மேல் சிகிச்சைக்காக அந்த இளம் பெண் மதுரை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகள் காவியா (20). தற்போது செங்கோட்டையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் குடும்பமாகச் சென்று ரயிலில் சாவிக்கொத்து, பர்ஸ் போன்றவை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
காவியா தனக்கும் தனது குடும்பத்திற்கும் உதவும்படி அச்சிடப்பட்ட அட்டைகளை பயணிகளிடம் கொடுத்து அதன் மூலம் அவர்கள் கொடுக்கும் உதவிகளையும் பெற்றுவந்தார்.
இந்நிலையில், மும்பையிலிருந்து திருநெல்வேலி சென்ற ரயிலில் திருநெல்வேலி செல்வதற்காக காவியா இன்று (திங்கள்கிழமை) காலை மதுரையில் ரயில் ஏறினார். விருதுநகர் வந்த ரயில் மெதுவாகப் புறப்படும்போது காவியா ரயிலிலிருந்து இறங்கியுள்ளார். அப்போது, கால் தடுமாறி ரயிலுக்கு அடியில் தண்டவாளத்தில் விழுந்தார்.
ரயில் வேகமெடுக்க சக்கரங்கள் ஏறி காவியாவின் இரு கால்களும் துண்டானது. அதையடுத்து, ரயில்வே போலீஸார் காவியாவை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அதன்பின் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு காவியா அனுப்பிவைக்கப்பட்டார். இதுகுறித்து விருதுநகர் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago