காலாவதியான மின்சார ரயில் பெட்டிகள்: பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி

சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர் மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களின் பெட்டிகள் பராமரிப்பு காலத்தையும் தாண்டி இயக்கப்படுவதால், பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம், திருத் தணி, வேலூர் உள்ளிட்ட இடங் களுக்கு புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. பேருந்துக் கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவாக உள்ளதால், தற்போது பயணிகள் அதிகளவில் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.

ஆனால், புறநகர் ரயில் பெட்டிகளின் பராமரிப்பு மிகவும் மோசமாக உள்ளது. உதாரணமாக, ஒரு பெட்டியை 12 மாதங்களுக்கு ஒருமுறை பணிமனைக்கு கொண்டு சென்று பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இது ஆங்கிலத்தில் பீரியாடிக்கல் ஓவர் ஹாலிங்’ (POH-Periodical of Overhauling) எனப்படுகிறது.

அதன் பிறகு அதற்கு தகுதி சான்றிதழ் வழங்கிய பிறகுதான் அப்பெட்டியை மீண்டும் பயன் படுத்த முடியும். இந்த பராமரிப்பு காலத்தை தற்போது 12 மாதங்களில் இருந்து 18 மாதமாக ரயில்வே நிர்வாகம் நீட்டித்துள்ளது. அப்படி இருந்தும், பராமரிப்புக் காலம் முடிந்த பிறகும் ரயில் பெட்டிகள் பராமரிக்காமல் இயக்கப்படுகின்றன.

புறநகர் மின்சார ரயிலின் பெட்டி எண்.12594ன் பராமரிப்பு பணி மார்ச், 2013 அன்று முடிக்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட பராமரிப்பு பணிக் காக செப்டம்பர், 2014ல் மீண்டும் பணிமனைக்கு கொண்டு சென்றி ருக்க வேண்டும். ஆனால், செப்டம் பர் மாதம் முடிந்து அக்டோபர் மாதம் வந்துள்ள நிலையில், அப்பெட்டி சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர் மார்க்கத்தில் தொடர்ந்து இயக்கப்பட்டு வரு கிறது. இதனால், பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

இதுகுறித்து, ரயில் பயணிகள் சங்க நிர்வாகி ஒருவர் ‘தி இந்து’ விடம் கூறுகையில், ஆண்டு தோறும் ரயில்வே பட்ஜெட்டில் பயணிகளின் பாதுகாப்பிற்காக அதிகளவில் நிதி ஒதுக்கப்படுகிறது. எனினும், ரயில்வே நிர்வாகம் பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்காமல் அலட்சி யம் காட்டி வருகிறது. இது போன்று பராமரிப்புக் காலம் முடிந்த நிலையிலும் அப்பெட்டி களை பயன்படுத்துவது துரதிருஷ்ட வசமானது. ஏதேனும் விபத் துக்கள் நிகழ்ந்த பிறகு, ரயில்வே நிர்வாகம் விழித்துக் கொள்வதற்கு பதிலாக, முன்பாகவே இத்தகைய பெட்டிகளை கண்டறிந்து அவற்றை உடனடியாக பராமரிக்க வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து, ரயில்வே அதி காரி ஒருவர் கூறுகையில், முடிந்த அளவிற்கு அனைத்துப் பெட்டிகளும் குறிப்பிட்ட காலத் திற்குள் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஒருசில பெட்டிகள் கவனிக்காமல் இயக்கப்பட்டி ருக்கலாம். எனினும், குறிப்பிட்ட பெட்டியை உடனடியாக பணிமனைக்கு கொண்டு சென்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE