இந்தியாவில் 6.5 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிப்பு

இந்தியாவில் 65 மில்லியன் (6.5 கோடி) மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீன் டாக்டர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.

உலக நீரிழிவு (சர்க்கரை நோய்) தினத்தை முன்னிட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் விழிப்புணர்வு பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது. மருத்துவமனை டீன் டாக்டர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

முகாமில் டீன் டாக்டர் மீனாட்சி சுந்தரம் பேசியதாவது:

இந்தியாவில் 65 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20 சதவீதம் பேர், ரத்த நாள அடைப்பினால் பாதிக்கப் பட்டுள்ளனர். ரத்த நாள அடைப்பு உள்ள சர்க்கரை நோயாளிகளில் 3 முதல் 5 சதவீதம் பேர் தங்களுடைய கால்களை இழக்கின்றனர்.இந்த மருத்துவமனையில் ரத்த நாள அடைப்பால் அவதிப்படும் சர்க்கரை நோயாளிகளுக்கு, ரத்த ஓட்டத்தை சீர்படுத்த தேவையான அனைத்து வசதிகளும் உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த முகாமில் ரத்த நாள அறுவைச் சிகிச்சை துறை தலைவர் டாக்டர் சுப்பிரமணியன், நீரிழிவு துறை பேராசிரியர் சுபஸ்ரீ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE