பயணிகளின் கோரிக்கையைத் தொடர்ந்து ‘அந்தியோதயா’ ரயில் 2 மணி நேரத்துக்கு முன்னதாக சென்னையை சென்றடையும் வகையில் நாளை முதல் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, மதுரை உட்பட தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தினமும் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளிலேயே இடம் கிடைக் காமல் பலரும் காத்திருப்புப்பட்டி யலில் இருக்கும் நிலை உள்ளது. எனவே பொதுப்பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்காக முன்பதிவு இல்லாத 20 பெட்டிகளுடன் நெல்லை-தாம்பரம் இடையே அந்தியோதயா பயணிகள் ரயில் கடந்த ஆண்டு முதல் தினமும் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், கடலூர், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் செல்லும். இந்த ரயில் 2019 மார்ச் முதல் நாகர்கோவில் வரை நீட்டிக் கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரி ரயில் பயணிகள் நலச்சங்கம் மற்றும் தென் மாவட்ட ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று தற்போது காலை 9.45 மணிக்குப் பதிலாக 7.35 மணிக்கு தாம்பரம் சென்றடையும் வகையில் நேரம் குறைக்கப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் தெரிவித் துள்ளது.
இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நாடு முழுவதும் 10 அந்தியோ தயா ரயில்கள் ஓடினாலும், தமிழகத்தில் ஓடும் இந்த ரயில் மட்டுமே தினமும் இயக்கப்படுகிறது. முன்பதிவு இல்லாத 20 பொதுப்பெட்டிகளைக் கொண்ட அந்தியோதயா ரயில் தென்மாவட்ட பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள் ளது.
நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்தது முதல் தினமும் ரூ.25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கிறது. மார்ச் மாதத்தில் ரூ.5 லட்சமும், ஏப்ரலில் 10 லட்சமும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்த ரயிலின் வேகத்தை அதிகரித்து, காலையில் முன் கூட்டியே தாம்பரம் சென்றடையும் வகையில் அட்டவணையை மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்படி, தினமும் காலை 7.35 மணிக்கு தாம்பரத்தைச் சென் றடையும் வகையில் ரயிலின் வேகம் நாளை முதல் (ஜூலை 2) அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற் கெனவே வழக்கமாக நிற்கும் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago