திருப்புல்லாணி அருகே மழை நீரை சேமித்ததால் வறட்சியிலும் தாகம் தணிக்கும் ஊருணி

By கி.தனபாலன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், திருப்புல்லாணி அருகே உள்ள கிராம ஊருணியில் மழை நீரை தேக்கி வைத்து பயன்படுத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாகப் பருவ மழை போதிய அளவு பெய்ய வில்லை. மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு (ஜனவரி முதல் டிசம்பர் வரை) 827 மி.மீட்டர். ஆனால் கடந்தாண்டு 666.79 மி.மீட்டர் மழை பதிவானது.

வடகிழக்குப் பருவ மழை காலத்தில் கண்மாய், குளங்கள், ஊருணிகள், நீர் நிலைகளில் குறைந்த அளவு தண்ணீர் தேங்கியது. அந்த தண்ணீரும் ஜனவரி மாதத்தில் வற்றிப்போனது. மாவட்டத்தில் அனைத்துப் பாசனக் கண்மாய்களும், 98 சதவீத ஊருணிகளும் வறண்டுள்ளன.

மாவட்டத்தில் மக்களின் பங்க ளிப்பால் சில கிராம ஊருணிகளில் நீர் நிறைந்துள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ஊராட்சியைச் சேர்ந்த பொக்கனாரேந்தல் கிராமம் விளங்குகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அனைவரும் விவசாயம் மற்றும் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். இக்கிராமத்தில் குடிநீர் ஆதரமாக காவிரி கூட்டுக் குடிநீர் உள்ளது. இதில் வாரத்துக்கு 2 நாட்கள் குடிநீர் வருகிறது.

இங்கு கிணறு, ஆழ்துளை கிணறு தோண்டினால் உப்பு நீர் தான் கிடைக்கிறது. அதனால் தங்கள் தேவைகளுக்காகவும், கால்நடைகளுக்காகவும் கிராமத்தில் உள்ள வெங்கட்ரேந்தல் ஊருணியை தூர்வாரித் தருமாறு பலமுறை ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் முறையிட் டுள்ளனர். அது நடக்காமல் போகவே 3 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுக்கு ரூ.1000 வசூலித்து மக்களே தூர்வாரும் நடவடிக் கையில் இறங்கினர்.

இக்கிராமத்தின் முன்னாள் தலைவர் பி.சாத்தையா, பொக்லைன் இயந்திரம் வைத்திருந்ததால் கிராம மக்களின் பங்களிப்புத் தொகையைப் பயன்படுத்தி, கூடுதலாக அவரும் செலவழித்து ஊருணியை தூர்வாரிக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்தாண்டு வடகிழக்குப் பருவ மழையின்போது கிராம மக்கள் மழை நீரையும், ஓடையில் தேங்கியிருந்த நீரையும் பம்ப் செட் மூலம் ஊருணியில் நிரப்பினர். அந்த மழைநீர் இன்னும் இந்த ஊருணியில் தேங்கி உள்ளது. இந்தத் தண்ணீரை பொதுமக்கள் குளிக்க, துணி துவைக்க, கால்நடைகளுக்குப் பயன்படுத்துகின்றனர். மாவட்டத்தில் பெரும்பாலான ஊருணிகள் வறண்டபோதும், வெங்கட்ரேந்தல் ஊருணியில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார்(42) கூறிய தாவது:

அரசு தூர்வாரித் தராததால் கிராம மக்களிடம் ரூ. 3 லட்சம் நிதி திரட்டி ஊருணியை 2 மீட்டர் ஆழத்துக்கு ஆழப்படுத்தி தூர்வாரினோம். கடந்தாண்டு மழைக்காலத்தின்போது ரூ.50 ஆயிரம் செலவழித்து ஓடையில் இருந்த நீரை பம்ப் செட் மூலம் ஊருணியில் நிரப்பினோம்.

இந்த கோடை காலத்திலும் எங்கள் தேவைக்கும், கால்நடைகளை காப்பாற்றவும் நீர் ஆதாரமாக உள்ளது. இருந்தபோதும் வரும் காலங்களில் எங்கள் கிராம ஊருணியை தூர்வாரித் தருவதுடன், மின்சாரம், சாலை வசதியை செய்துதர வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்