‘‘அமைச்சர் ஜெயக்குமாரும் நானும் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளோம்’’- அமைச்சர் விஜயபாஸ்கர்

By செய்திப்பிரிவு

தானும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளதாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

உடல் உறுப்பு தான வார விழிப்புணர்வு முகாமை இன்று (திங்கள்கிழமை) சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

உடல் உறுப்பு தானம் வழங்கிய 5 கொடையாளிகளின் குடும்பங்களுக்கு பாராட்டு மற்றும் நினைவுப் பரிசை வழங்கினர். உடல் உறுப்பு தானம் என்ற பொருளை மையப்படுத்தி நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்ச்ரகள் பரிசுகள் வழங்கினர். மேலும், உடல் உறுப்பு தான விழிப்புணர்வு ரங்கோலியினை அவர்கள் பார்வையிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், உடல் உறுப்பு தானம் வழங்குவதில் தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது என்று தெரிவித்தார். மேலும், தானும் அமைச்சர் ஜெயக்குமாரும் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளதாகவும், அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்குகிறது. இதற்காக, தொடர்ந்து 4 ஆண்டுகளாக மத்திய அரசு விருதுகள் வழங்கி வருகின்றது", என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்