வெளிநாடு அனுப்புவதாக ரூ.2.30 லட்சம் மோசடி: சிவகங்கையில் போலி போலீஸ் அதிகாரி கைது

By இ.ஜெகநாதன்

வெளிநாடு அனுப்புவதாகக் கூறி ரூ.2.30 லட்சத்தை மோசடி செய்த சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த போலி போலீஸ் அதிகாரியை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

சிங்கம்புணரியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (28). இவர் தான் போலீஸ் அதிகாரியாக இருப்பதாகவும், அர்மேனியா நாட்டில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.

இதை நம்பிய புதுக்கோட்டை மாவட்டம் வடவாத்தியைச் சேர்ந்த பிரபு (29) என்பவர் முத்துக்குமாரிடம் பிப்ரவரியில் ரூ.2.30 லட்சம் கொடுத்துள்ளார்.

ஐந்து மாதங்களாகியும் வெளிநாடும் அனுப்பவில்லை. பணத்தையும் தரவில்லை. இதுகுறித்து பிரபு சிவகங்கை மாவட்ட எஸ்பி ரோகித்நாதன் ராஜகோபாலிடம் புகார் தெரிவித்தார். அவரது உத்தரவில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்தனர். இதில் முத்துக்குமார் போலி போலீஸ் அதிகாரி என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார்  அவரிடமிருந்து போலி அடையாள அட்டை, விசாக்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவருக்கு உதவியாக இருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலைச் சேர்ந்த ராமச்சந்திரனை (28) தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்