காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் எழுந்தருளிய அத்திவரதர்; தரிசனத்துக்காக நள்ளிரவுமுதல் காத்திருந்த பக்தர்கள்

By இரா.ஜெயப்பிரகாஷ்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் எழுந்தருளிய அத்தி வரதரை நள்ளிரவுமுதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் அனந்தசரஸ் குளத்தில் இருக்கும் நீராழி மண்டபத்தில் 40 ஆண்டுகளாக நீருக்குள் மூழ்கிய நிலையில் அத்திவரதர் வைக்கப்பட்டிருந்தார். பக்தர் களுக்கு காட்சி அளிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை அன்று அத்திவரதர் சிலை வெளியே எடுத்து வரப்பட்டது. இதையடுத்து அச்சிலைக்கு தைலக்காப்பு, சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டன. இதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடந்தன.

இந்நிலையில் அத்திவரதரை தரிசிப்பதற்காக முதல்நாள் நள்ளிரவுக்கு மேல் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் வந்து காத்திருந் தனர். நேற்று காலை 6 மணி அள வில் வரதராஜபெருமாள் கோயி லில் இருக்கும் வசந்த மண்டபத் தில் சயனக் கோலத்தில் அத்தி வரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

ஆளுநர் சுவாமி தரிசனம்

அத்திவரதரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று அதிகாலை 6 மணி அளவில் வந்து தரிசனம் செய்தார். இதுபோல் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பணீந்திரரெட்டி ஆகி யோரும் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

பாதுகாப்பில் 2,656 போலீஸார்

காஞ்சிபுரம் காவல் கண்காணிப் பாளர் சந்தோஷ் ஹதிமானி தலைமையில் போலீஸார் பாது காப்பு ஏற்பாடுகளை செய்திருந் தனர். 4 கூடுதல் காவல் கண் காணிப்பாளர்கள், 20 துணை கண் காணிப்பாளர்கள், 48 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 2,656 போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர். விழாவுக் காக 14 கண்காணிப்பு கோபுரங் கள் அமைக்கப்பட்டுள்ளன. 10 சோதனைச் சாவடிகள் மற்றும் ரோந்து வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு மினி பஸ்கள்

காஞ்சிபுரம் பகுதிக்குள் பய ணிக்க 20 சிறப்பு மினி பஸ்கள் இயக்கப்பட்டன. ரூ.10 கட்டணம் செலுத்தி பொதுமக்கள் இதில் பயணித்தனர். வெளியூர் வாகனங் கள் தடை என்று அறிவிக்கப் பட்டிருந்தாலும் கோயில் இருக் கும் பகுதியில் மட்டுமே வாகனங் கள் தடை செய்யப்பட்டன. மற்ற படி வாகனங்கள் நகருக்குள் பெரும் பாலும் அனுமதிக்கப்பட்டன.

விழாவுக்காக காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலையில் பச்சை யப்பன் ஆடவர் கல்லூரி, ஒலி முகமதுபேட்டை, ஓரிக்கை ஆகிய இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டன. அங்கிருந்தே மினி பஸ்கள் கோயிலுக்கு இயக்கப்பட்டன. கோயிலுக்குச் செல்லும் மக்களும் அங்கு இறங்கி மினி பஸ்ஸில் பயணம் செய்தனர்.

பேட்டரி கார்கள்

மாற்றுத்திறனாளிகள், முதி யோர் வரிசையில் அனுமதிக் கப்படவில்லை. அவர்கள் பேட்டரி கார் மூலம் அழைத்து வரப்பட்டு முக்கிய பிரமுகர்கள் தரிசனம் செல்லும் பகுதி வழியே தனியாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் அவர்கள் சிரமமின்றி அத்திவரதரை தரசித்தனர்.

காஞ்சிபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் கோயிலுக்கு வருபவர் களுக்கு குடிநீர் வசதி செய்யப் பட்டது. வரிசையில் வரும் மக் களுக்கும் ஆங்காங்கே குழாய் கள் மூலம் குடிநீர் வழங்கப்படு கிறது.

தனியார் வணிக நிறுவனங் களும் தங்கள் கடைகளுக்கு வெளியே குடிநீர் வைத்திருந் தனர். புதிதாக பல கழிப்பிடங் கள் உருவாக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர் களுக்காக மொபைல் ஏடிஎம் வசதி செய்யப்பட்டிருந்தது.

குளத்துக்குள் வைக்கப்பட்டது ஏன்?

அத்திவரதரை முன்னிறுத்தி பிரம்மன் யாகம் செய்தபோது, யாகத் தீ அத்திவரதர் மீது பட்டு அவர் உஷ்ணமானதாகவும், எனவே இவரை குளிர்விக்க அதே கோயிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த திருக்குளத் தில் எப்போதும் நீர் வற்றாது. கோயிலில் இருந்த அத்திவரதர் குளத்துக்குள் சென்றதால் பழைய சீவரம் பகுதியில் அவரைப் போலவே தோற்றம் கொண்ட தேவராஜ பெருமாள்தான் தற்போது இக் கோயிலில் மூலவராக உள்ளார். இந்தக் கோயிலுக்கு உரியவரான அத்திவரதரை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியில் கொண்டு வந்து பொதுமக்கள் தரிசனத்துக்கு வைக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்