கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கு ஜாமீன் வழங்கி நீலகிரி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவத்தில் சயான், வாளையாறு மனோஜ், தீபு, ஜித்தின் ஜாய், ஜம்ஷேர் அலி, சந்தோஷ்சாமி, உதயகுமார், மனோஜ்சாமி, பிஜின்குட்டி மற்றும் சதீசன் ஆகிய 10 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
இவர்களில் சயான், வாளையாறு மனோஜ், தீபு மற்றும் பிஜின் குட்டி ஆகிய நால்வர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சயான் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும், வேறு பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் தீபு, பிஜின்குட்டி ஆகிய இருவரும் குறிப்பிட்ட நாளில் வழக்கின் விசாரணையின்போது நேரில் ஆஜராகாததால் அவர்களும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், தீபு, பிஜின்குட்டி ஆகியோர் ஜாமீன் கேட்டு உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆனந்தன், ரவிசந்திரன் மற்றும் சிவகுமார் ஆகியோர் ஆஜராகினர். இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி பி.வடமலை இருவருக்கும் தனி நபர் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில் கோடநாடு எஸ்டேட் விவகாரம் தொடர்பான வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 18-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago