சென்னைத் துறைமுகம் மதுரவாயல் சாலை பிரச்சினை: தமிழக முதல்வருக்கு மத்திய அமைச்சர் நிதின்கட்கரி வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னைத் துறைமுகம் மதுரவாயல் உயர்மட்ட விரைவுச் சாலை திட்டப் பணிகள் தொடர்பான பிரச்சினையை உச்ச நீதிமன்றத்துக்கு வெளியே பேசித் தீர்த்துக் கொள்ள தயாராக இருப்பதாகவும், இப்பணியை முடிக்க தமிழக முதல்வர் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும் மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கேட்டுக் கொண்டார்.

இதுதொடர்பாக சென்னைத் துறைமுகத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:-

சென்னைத் துறைமுகம் மதுரவாயல் உயர்மட்ட விரைவுச் சாலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. எனவே, இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டுமென உச்சநீதி மன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யவுள்ளோம்.

இத்திட்டம் நிறைவேற்றப் பட்டால், லாரி போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். தமிழக மக்களுக்கும், சென்னைத் துறைமுகத்துக்கும் மிகவும் பயனுள்ள இத்திட்டத்தை நீதிமன்றத்துக்கு வெளியே பேசித் தீர்த்துக் கொள்ள தயாராக இருக்கிறோம். இத்திட் டத்தை விரைந்து முடிக்க ஒத்துழைக்க வேண்டும் என்று இக்கூட் டத்தின் வாயிலாக தமிழக முதல் வரை நான் கேட்டுக் கொள் கிறேன். அரசியலையும், நாட்டின் முன்னேற்றத்தையும் தனித் தனியாகத்தான் பார்க்கிறோம்.

சேது சமுத்திர கால்வாய் திட்டத் தைப் பொறுத்தவரை, ராமர் பாலத்தை இடிக்காமல் நிறை வேற்றுவதில் நாங்கள் உறுதி யாக இருக்கிறோம். இதுதொடர் பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இத்திட்டத்துக்கான 4 மாற்று வழிகளை நாங்கள் வைத்திருக்கி றோம். இத்திட்டம் தொடர்பாக ராமேஸ்வரம் பகுதியில் நாளை நான் ஆய்வு செய்ய இருக்கி றேன். நிபுணர் குழுவின் அறிக்கை அடிப்படையில் மத்திய அமைச் சரவை முடிவெடுக்கும்.

தமிழ்நாட்டில் தஞ்சை பட்டுக்கோட்டை, மதுரை ராமநாத புரம், நாகை தஞ்சை, காவல்கிணறு நாகர்கோவில் உள்ளிட்ட சாலை கள் அகலப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படவுள்ளன. கன்னியா குமரியில் 5 மேம்பாலங்கள் கட்டப் படும். நில எடுப்புப் பணி முடிந்ததும், திட்டப்பணி தொடங்கும். அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எங்கள் துறையின் பங்களிப்பு 2 சதவீதமாக இருக்கும். இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.

பேட்டியின்போது, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சென்னைத் துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்