பழநி முருகன் சுவாமி கோயிலில் உள்ள நவபாஷாணத் தால் ஆன முருகன் சிலையை மாற்றத் திட்டமிட்டிருந் ததாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.
பழநி மலையில் பிரசித்தி பெற்ற முருகன் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு போகர் என்ற சித்தரால் செய்யப்பட்ட ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமை யான நவபாஷாண தண்டாயுத பாணி சிலை உள்ளது. இச் சிலையை மறைத்து மூன்றரை அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன புதிய மூலவர் சிலை கடந்த 2004-ம் ஆண்டு ஜூன் மாதம் வைக் கப்பட்டது.
இதற்கு அப்போதே பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்த போதும் சிலை அகற்றப்பட வில்லை. இந்த சிலை சில மாதங்களிலேயே கருத்துப்போனது. இதையடுத்து சிலையை அகற்றி கோயிலில் சிலைகள், ஆபரணங்கள் பாதுகாக் கப்படும் லாக்கரில் வைத்து கோயில் நிர்வாகம் பாதுகாத்து வந்தது. இந்நிலையில் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் காஞ்சிபுரம் ஏகாம்ப ரநாதர் கோயிலில் சிலை முறைகேடு வழக்கில் ஸ்தபதி முத்தையாவை கைது செய்து விசாரித்தனர். அப்போது கூடுதல் தகவலாக பழநி கோயிலுக்கு ஐம்பொன் சிலை செய்தததில் முறைகேடு நடந்துள்ளதாக ஸ்தபதி முத்தையா வாக்குமூலத்தில் தெரியவந்தது.
இதையடுத்து இதை தனி வழக்காகப் பதிவு செய்து பழநி கோயிலுக்கு ஐம்பொன் சிலை செய்ததில் நடந்த முறைகேடு குறித்து சிலை கடத்தல் பிரிவு போலீஸார் விசாரித்தனர். இதில் ஸ்தபதி முத்தையா, அப்போதைய பழநி கோயில் இணை ஆணையர் உசிலம்பட்டியைச் சேர்ந்த கே.கே.ராஜா உள்ளிட்ட அறநிலையத் துறை அதிகாரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஐம்பொன் சிலையில் எந்த அளவுக்கு ஐம்பொன் கலவை சேர்க்கப்பட்டுள்ளது என நிபுணர் கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சர்சைக்குரிய ஐம்பொன் சிலை 14 ஆண்டு களுக்குப் பிறகு பழநி கோயில் லாக்கரில் இருந்து மீட்கப்பட்டு கும்பகோணம் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒப்ப டைக்கப்பட்டது.
இந்நிலையில் பழநி ஐம்பொன் சிலை வழக்கு விசாரணையை மீண்டும் விரைவுபடுத்தும் விதமாக சிறப்பு அதிகாரி பொன் மாணிக்க வேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் முதல் பழநியில் முகாமிட்டு ஐம்பொன் சிலை தொடர்பாக கோயிலில் இருந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வுக்குப் பிறகு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி முகேஷ்ஜெயக்குமார் செய்தி யாளர்களிடம் நேற்று கூறியதாவது:
பழநி முருகன் சுவாமி கோயிலில் ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலையை மாற்றும் உரிமையோ, அதிகாரமோ எந்த நபருக்கும், எந்த அரசுக்கும் இல்லை. இச்சிலையை சிலரது சொந்த லாபத்துக்காக மாற்ற, மிகப் பெரிய சதித் திட்டம் தீட்டியது உண்மை என்பதும், இதற்கு முதலில் அடிக்கோலிட்டவர் பிரதான குற்ற வாளியான ஸ்தபதி முத்தையா என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சதியை செயல்படுத்த முத் தையாவை பின்னின்று இயக் கியவர்கள் யார், யார் என்பதை விரைவில் கண்டறிய உள்ளோம். இந்த வழக்கில் விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உள் ளோம் என்றார்.
அப்போது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், ஆய் வாளர்கள் அமுதா, தமிழ்ச்செல்வி ஆகியோர் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago