அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கினர். இதில், 3 தொழிலாளர்கள் கவலைக்கிடமான நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் நள்ளிரவு 12.45 மணிக்கு 747 அலகில் வெடி விபத்து ஏற்பட்டது. விபத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கினர். இதில் படுகாயமடைந்த 3 பேர் கோவை கங்கா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அருவங்காடு போலீஸார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸார் கூறும் போது, ''தொழிற்சாலையின் 747 அலகில் தொழிலாளர்கள் பயோ மாடல் சார்ஜ் எனும் ரசாயனம் நிரப்பிக் கொண்டிருந்தபோது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், சூரஜ் குமார் (27), ராபின் (29) மற்றும் சற்குணம் முரளி (48) ஆகியோர் படுகாயமடைந்து கோவையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாகராஜ், மோகன் மற்றும் தினேஷ் வெடிமருந்து தொழிற்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாகராஜூக்குக் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. மோகன் மற்றும் தினேஷ் ஆகிய இருவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது'' என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago