அதிமுக எம்எல்ஏக்கள் 19 பேர் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், திருவில்லிபுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும் தினகரனுக்கு ஆதரவு அளிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக அரசுக்கு எதிராக தினகரன் அணியில் 21 எம்எல்ஏக்கள் அணி திரண்டுள்ளனர். இவர்களில் சாத்தூர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் எதிர்கோட்டை சுப்பிரமணியனும் ஒருவர்.
இவர் விருதுநகர் மாவட்டச் செயலரும் பால்வளத் துறை அமைச்சரும், சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு மிக நெருக்கமானவர். இவர் திடீரென தினகரனுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது விருதுநகர் மாவட்ட அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தினகரன் அணியில் திருவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபாவும் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.
விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் 3 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது. தற்போது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை தவிர மற்ற இரண்டு சட்டப் பேரவை உறுப்பினர்களும் தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக தகவல் பரவுவதால் விருதுநகர் மாவட்ட அதிமுகவினர் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து சந்திரபிரபா எம்எல்ஏவிடம் கேட்டபோது, டிடிவி தினகரன் அணியில் இணைவதா?, இல்லையா? என்பது குறித்து ஓரிரு நாளில் திட்டவட்டமான முடிவை அறிவிப்பதாக தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago