அதிமுகவில் நேற்று ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தையும் தாண்டி கட்சிக்குள் தங்களுடைய செல்வாக்கை காட்ட மதுரை மேலூரில் வரும் 14-ம் தேதி டிடிவி தினகரன் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த அவரது ஆதரவாளர்கள் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிமுக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட தினகரன், கடந்த வாரம் தன்னிச்சையாக புதிய நிர்வாகிகளை அறிவித்தது, முதல்வர் பழனிசாமிக்கும், அவரது ஆதரவு அமைச்சர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள், நிர்வாகிகள் கூடி, தினகரனின் நியமனம் செல்லாது என்றும், அவரது அறிவிப்பு கட்சியை கட்டுப்படுத்தாது எனவும் அறிவித்தனர். இதனால், இரு அணிகளுக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
சுற்றுப்பயணம் நடக்குமா?
இந்நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தால் தினகரன் ஏற்கெனவே அறிவித்த தமிழகம் முழுவதுமான சுற்றுப்பயணம் நடக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், அவரது ஆதரவாளர்கள், திட்டமிட்டபடி தினகரனின் சுற்றுப்பயணம் நடக்கும் என தெரிவித்துள்ளனர்.
இதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று பேட்டியளித்த நாஞ்சில் சம்பத், ‘மேலூரில் நடக்கும் கூட்டத்துக்கு பிறகு அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் தினகரன் பக்கம்தான் இருக்கிறார்கள் என்பது தெரியவரும். அந்த கூட்டம் மூலம் அவர்களுக்கு (பழனிசாமி அணிக்கு) பதிலடி கொடுப்போம்’ என்றார்.
தினகரனின் சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றுள்ள முதல் பொதுக்கூட்டம் மதுரை மேலூரில் வரும் 14-ம் தேதி நடக்கிறது. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் தினகரன் பங்கேற்கும் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அழைப்பிதழ் அடித்து போலீஸாரிடம் அனுமதி பெறுவது வரை இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், தற்போது வரை போலீஸார் இந்த கூட்டத்துக்கு அனுமதி கொடுக்கவில்லை.
அனுமதி கிடைக்குமா?
தற்போது முதல்வர் பழனிசாமி கட்சியிலும், ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளதால் மேலூர் கூட்டத்துக்கு போலீஸார் அனுமதி கிடைக்குமா? என்ற சிக்கலும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, தினகரன் ஆதரவாளர்கள் கூறும்போது, ‘அதிமுகவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்துக்கு பிறகு மேலூர் கூட்டத்தை இன்னும் பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்ற வைராக்கியம் ஏற்பட்டுள்ளது’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago