ராஜீவ்காந்தி கொலை வழக்கு: ரவிச்சந்திரன் பரோல் மனு தள்ளுபடி

By கி.மகாராஜன்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனுக்கு பரோல் விடுமுறை வழங்க உத்தரவிடக்கோரி அவரது தாயார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டயைச் சேர்ந்த ராஜேஸ்வரி, உயர் நீதிமன்ற கிளையில் ததாக்கல் செய்த மனு:

எனது மகன் ரவிச்சந்திரன் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 26 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த 26 ஆண்டு சிறையில் 3 முறை அவருக்கு பரோல் விடுமுறை வழங்கப்பட்டது. சொத்து பாகப்பிரிவினைக்காக 2012-ல் 15 நாள் பரோலில் விடுதலை செய்யப்பட்டார். அந்த 15 நாளில் அவரை சொத்துப்பங்கீடு தொடர்பாக வழக்கறிஞர்களை சந்திக்கவோ, சொத்தை பார்வையிடவோ போலீஸார் அனுமதிக்கவில்லை. எனது மகன் சாதாரண விடுப்பில் வந்து 2 ஆண்டுகள் முடிந்து விட்டதால், மீண்டும் பரோல் கேட்பதற்கு உரிமை உண்டு.

எனவே ரவிச்சந்திரனை குடும்ப சொத்து பாகப்பிரிவினைக்காக ஒரு மாதம் பரோல் விடுமுறை வழங்கக்கோரி மதுரை சிறை கண்காணிப்பாளருக்கு மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக உள்துறை செயலருக்கும் மனு அனுப்பப்பட்டது. இந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் அமர்வில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் லஜபதிராய், திருமுருகன் வாதிட்டனர். அப்போது அரசு தரப்பில் மனுதாரரின் மகனுக்கு பரோல் வழங்க மறுத்து மதுரை சரக சிறைத்துறை துணைத் தலைவர் ரா.கனகராஜ் பிறப்பித்த உத்தரவு நகல் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் மனுதாரரின் மகன் ரவிச்சந்திரனுக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டு, உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அவர் 28.1.1998 முதல் ஆயுள் தண்டனை சிறைவாசியாக இருந்து வருகிறார். இவருக்கு வழங்கப்பட்ட தண்டையானது இந்திய அரசில் வயர்லெஸ் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பாஸ்போர்ட் சட்டம் சார்ந்துள்ளது.

இந்த சட்டங்களில் கீழ் வழங்கப்பட்ட தண்டனைகளை இவர் கழித்திருந்தாலும், மத்திய அரசின் அந்த இரு சட்டங்களின் கீழ் இவர் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. எனவே தமிழ்நாடு தண்டனை நிறுத்தி வைப்பு விதியின் கீழ் இவர் சாதாரண விடுப்பு பெற தகுதியற்றவர் ஆவார். இதனால் இவருக்கு சாதாரண விடுப்பு வழங்க மறுத்து உத்தரவிடப்படுகிறது என பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இருப்பினும் விடுமுறை வழங்க மறுத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு உரிமை வழங்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்