ராமேசுவரம் அருகே வேதாளை கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கிய புள்ளி சுறா மீனை அப்பகுதி மீனவர்கள் உதவியுடன் வனத்துறையினர் ஆழ்கடல் பகுதியில் விட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில், டால்பின், கடல் பசு, சுறா, திமிங்கலம் உள்ளிட்ட அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் அதிகமாக வசிக்கின்றன. இவை கடலில் ஏற்படும் இயற்கை சீதோஷ்ண மாற்றங்கள், விபத்துகளால் தடை செய்யப்பட்ட வலைகளில் சிக்கி உயிரிழந்து கரை ஒதுங்குவது தற்போது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை மாலை ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள வேதாளை என்கிற மீனவ கிராமத்தில் சுமார் 100 கிலோ எடை கொண்ட புள்ளி சுறா ஒன்று கரையில் துடித்துக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் உடனே மண்டபம் வனத்துறை அலுவலகர்களிடம் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மண்டபம் வனச்சரகர் சதிஷ் தலைமையிலான குழுவினர் புள்ளிச் சுறாவை சோதனையிட்டதில் 10 அடி நீளமுள்ள 5 வயதுள்ள அந்த பெண் புள்ளிச் சுறா இரை தேடும்போது ஆழம் குறைந்த பகுதிக்கு வந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என்பது தெரிய வந்தது.
உடனே அந்தப் பகுதி மீனவ இளைஞர்கனின் உதவியுடன் மீட்டு ஆழமான கடற்பகுதியில் வனத்துறையினர் கொண்டு விட்டனர். ஆழமான கடல் பகுதிக்குள் சென்றதும் புள்ளி சுறா உற்சாகமாக நீந்திச் சென்றது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago