மதுரை அதிமுகவில் ‘திடீர்’ திருப்பம்: தினகரனுக்கு ராஜன் செல்லப்பா மகன் ஆதரவு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை அதிமுக புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து தினகரனால் நீக்கப்பட்ட ராஜன் செல்லப்பா எம்எல்ஏவின் மகன், தற்போது தினகரன் அணியில் இணைகிறார்.

அதிமுக துணைப் பொதுச் செயலாளர் (அம்மா அணி) தினகரன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து ராஜன் செல்லப்பா எம்எல்ஏவை சமீபத்தில் நீக்கினார்.

மேலூரில் நடந்த தினகரனின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்காமலும் கூட்டத்துக்கு நிர்வாகிகளையும், தொண்டர்களையும் போக விடாமல் தடுத்ததாகவும் அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. அதனால்தான் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து அவரை தினகரன் நீக்கியதாக கூறப்படுகிறது.

அதிருப்தியடைந்த ராஜன் செல்லப்பா, போட்டி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தை கூட்டி எல்லோரும் தங்கள் பக்கம்தான் என்று காட்டி தினகரனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார்.

இந்நிலையில், அவரது மகன் ஆர்.ராஜ் சத்தியன், தனது ஆதரவாளர்களுடன் இன்று (27-ம் தேதி) தினகரன் அணியில் இணைவதாக கூறப்படுகிறது. தற்போது அவர் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளராக உள்ளார்.

இதுகுறித்த ராஜ் சத்தியனிடம் கேட்டபோது, ‘அதிமுகவின் இந்த 4 ஆண்டுகால ஆட்சியை வைத்து மட்டுமே கட்சியை காப்பாற்றிவிட முடியாது. கட்சியின் எதிர்காலம் முக்கியம்.

தினகரன்தான் எனக்கு கட்சியில் செயல்பட வாய்ப்பு கொடுத்தார். வளர்த்து விட்டவர்களுக்கு விசுவாசத்துடன் இருக்க விரும்புகிறேன்’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்