ஆறாவது நாளாக புதுச்சேரியில் முகாமிட்டுள்ள டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் நட்சத்திர விடுதியிலிருந்து மீண்டும் ரிசார்ட்டுக்கு இன்று மாறினர்.
டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் பாதுகாப்பு கருதி புதுச்சேரிக்கு கடந்த 22ம் தேதி வந்தனர். சின்னவீராம்பட்டினத்தில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்தனர். இந்நிலையில் ரிசார்ட்டிலிருந்து நூறடி சாலையிலுள்ள நட்சத்திர விடுதிக்கு இடம் மாறினர். விடுமுறை நாட்களில் முன்பதிவு காரணமாக அறைகள் திருப்பித் தந்துள்ளதாகவும், மீண்டும் ஞாயிறு மாலைமீண்டும் ரிசார்ட்டுக்கு மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
சொகுசு விடுதியில் தங்கியிருந்த போது கடற்கரையில் நடைப்பயிற்சியும், சொகுசு விடுதி பூங்காவில் விளையாடியும் எம்.எல்.ஏ.க்கள் பொழுதுபோக்கினர். ஆனால் நட்சத்திர விடுதியில் அதுபோன்று செயல்பட முடியவில்லை. காலை நேரத்தில் சில எம்.எல்.ஏ.க்கள் விடுதிக்கு வெளியே சென்று நடைபயிற்சி மேற்கொண்டதுடன், சாலையோரம் உள்ள டீக்கடையில் டீயும் குடித்தனர். விடுதியினுள் சில உடற்பயிற்சிகளையும் செய்தனர்.
இந்நிலையில் ரிசார்ட்டில் தங்கியிருந்தோர் புறப்பட்டு சென்றதை அறிந்தவுடன் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று மதிய உணவு சாப்பிட்டு முடித்து விட்டு சின்ன வீராம்பட்டினத்தில் ஏற்கெனவே தங்கியிருந்த ரிசார்ட்டுக்கு புறப்பட்டு சென்றனர். போலீஸ் பாதுகாப்பு அதிக அளவு போடப்பட்டிருந்தது. பாதுகாப்புடன் அவர்கள் அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
சின்ன வீராம்பட்டினத்தில் ரிசார்ட்டில் மொத்தம் 22 அறைகள் வரும் வெள்ளிக்கிழமை வரை பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு தங்கியிருந்து தங்க தமிழ்ச்செல்வன், ஜக்கையன் ஆகியோர் ஊருக்கு சென்றுள்ளதாகவும் அவர்கள் திங்கள்கிழமை ரிசார்ட் திரும்புவார்கள் என்று டிடிவி தரப்பில் குறிப்பிட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago