5 மீனவர்கள் விடுதலைக்கு மத்திய அரசின் முயற்சியே காரணம்: தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை

இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்கள் விடு தலை செய்யப்பட்டதற்கு மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளே காரணம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி மனதுக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. தமிழக மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நேற்று முன்தினம் சந்தித்து பேசினர். அப்போது தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு உறுதியுடன் எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ள னர். பிரதமர் நரேந்திர மோடி யும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் மேற்கொண்ட முயற்சிகள்தான் மீனவர்கள் விடு விப்புக்கு முக்கிய காரணமாகும். இதன் மூலம் மோடியின் அரசு மக்கள் நலனைப் பாதுகாக்கும் அரசு என்பது நிரூபணம் ஆகியுள்ளது. இந்த பிரச்சினையில் மத்திய அரசின் உண்மையான முயற்சிகளை விமர்சித்தவர்கள், இப்போது அரசின் நல்லெண்ணத்தை புரிந்துகொள்வார்கள். மேலும் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கிற காலமும் வெகு தொலைவில் இல்லை என்று அந்த அறிக்கையில் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE