தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமையும்?- 1.1.2018-ல் அறிவிக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது எங்கே என்பது குறித்து 1.1.2018-ல் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில், "மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் 15 மாவட்ட மக்களுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்கும்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எந்த இடத்தில் அமைக்கப்படும் என்பதை மத்திய அரசு இன்னும் அறிவிக்காமல் உள்ளது. இதனால் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமையும் என்பதை அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இதேபோல், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசுக்கு உத்திரவிடக்கோரி பாஸ்கர் என்பவரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நலன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகளில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "தமிழகத்தில் எய்ம்ஸ் அமையும் இடத்தை தேர்வு செய்து அனுப்புமாறு மத்திய அரசு கேட்டுள்ளது. இதில் தமிழக அரசு பதிலுக்காக காத்திருக்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு சார்பில் சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பதில் மனுவில், "மதுரை ஈரோடு தஞ்சை புதுக்கோட்டை காஞ்சிபுரம் என ஐந்து இடங்களைத் தேர்வு செய்து அனுப்பினோம். அவற்றை மத்திய குழுவினர் பார்வையிட்டு எந்த இடத்தில் எய்ம்ஸ் அமைய வேண்டும் என்பதை மத்திய அரசுதான் சொல்ல வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், எய்ம்ஸ் வழக்கு இன்று (புதன்கிழமை) நீதிபதிகள் சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையிலான அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. காலை இந்த மனு விசாரணைக்கு வந்தபோது எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை ஆய்வு செய்ய ஆக்ஸ்ட் 1 2017 அன்று மத்திய குழு அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

பிற்பகல் மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, “தமிழகத்தில் எய்மஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. எய்ம்ஸ் அமைவதற்காக மாநில அரசு பரிந்துரைத்துள்ள இடங்களை மத்திய அரசின் துணைக் குழு 2 மாதங்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதனை, வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் பரிசீலித்து 01.01.2018-ல் அறிவிக்க வேண்டும். தமிழக மக்களுக்கு புத்தாண்டு பரிசாக இதனை அறிவிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்