அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்த விபத்துகளில் 2-வது இடத்தில் தமிழகம்: ஓட்டுநர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் விபத்துகளை குறைக்கலாம்

By கி.மகாராஜன்

இந்தியாவில் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்த விபத்துகளில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தால் விபத்துகள் பெருமளவில் குறையும் என வட்டார போக்குவரத்து அலுவலர் யோசனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சாலை விபத்துகளில் தினமும் 400 பேர் உயிரிழக்கின்றனர். ஒவ்வொரு 3.6 நிமிடத்துக்கு ஒரு மனித உயிர் விபத்தில் பறி போகிறது. கடந்த ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துகளில், அதிக உயிரிழப்பு ஏற்பட்டதில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

இந்த மாநிலத்தில் 17,666 பேர் கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் 15,642 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்து மகாராஷ்ட்ராவில் 13,212 பேர், கர்நாடகாவில் 10,856 பேர், ராஜஸ்தான் மாநிலத்தில் 10,510 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த விபத்துகளில் 20 சதவீத விபத்துகள் வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் சாலை விபத்துகளை குறைப்பது தொடர்பாக கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெ.கே.பாஸ்கரன் கூறியதாவது: கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் 5,01,423 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இந்த விபத்துகளில் 1,46,133 பேர் உயிரிழந்துள்ளனர். 5,00,279 பேர் காயமடைந்துள்ளனர்.

நேரெதிர் மோதல்கள் அதிகம்

இருவழி, ஒருவழிச் சாலைகளில் தான் எதிர் எதிரே வாகனங்கள் மோதிக்கொள்ளும் சூழ்நிலை உள்ளது. இந்தச் சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்கள் சாலையின் சூழல், வாகனங்களின் பெருக்கம், சாலையோரக் கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகள், சாலை இணைப்புகள் மற்றும் அப்போதைய இயற்கை சூழல்களை கவனத்தில் கொண்டு வாகனங்களை இயக்க வேண்டும்.

ஒரு வாகனத்தை மற்றொரு வாகனம் முந்துவதற்கான முயற்சியின்போதுதான் வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன. பல நேரங்களில் முன்னால் செல்லும் வாகனங்களை முந்தி விடலாம் என நினைத்து முன்னேறும் போது எதிரே வாகனம் வந்துவிடும்.

அப்போது ஓட்டுநர் தனது வாகனத்தின் செயல்பாட்டை நன்கு உணர்ந்து, எதிரே வரும் வாகனத்தின் வேகம், இடைவெளியை மனதில் கொண்டு முடிவெடுக்க வேண்டியது முக்கியம்.

விட்டுத்தரும் மனம் தேவை

எந்தவொரு ஓட்டுநரும் ஒரு வாகனம் முந்தும்போது தனது வாகனத்தின் வேகத்தை குறைத்து மற்ற வாகனம் தன்னை முந்துவதற்கு உதவ வேண்டும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் செயல்பட்டு, எதிர்வரும் வாகனங்களின் ஓட்டுநர்களுக்கும் நல்ல மனநிலையை ஏற்படுத்தினால் கண்டிப்பாக விபத்துகள் குறையும்.

ஓட்டுநர்களின் மனநிலை இவ்வாறு இருந்தால் தமிழகத்தை மட்டும் இல்லாமல், இந்தியாவை கூட விபத்தில்லாத நாடாக மாற்றலாம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

43 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்