இரண்டு அமைச்சர்களின் ஆதரவு தங்களுக்கு உள்ளதாக தினகரன் அணியைச் சேர்ந்த எம்எல்ஏவான தங்கத்துரை தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதி எம்எல்ஏ தங்கத்துரை. அதிமுக (அம்மா) துணைப் பொதுச்செயலாளர் தினகரனின் ஆதரவாளரான இவர், தற்போது புதுச்சேரியில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார்.
‘தி இந்து’ செய்தியாளரிடம் அவர் நேற்று கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாத குறையை போக்கும் வகையில் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் செயல்படுகிறார்.
தற்போது 19 பேர் புதுச்சேரி விடுதியில் தங்கியுள்ளோம். இன்னும் 2 எம்எல்ஏக்கள் விடுதிக்கு வர உள்ளனர். அவர்கள் யார் என பெயரை சொன்னால், அவர்களை வரவிடாமல் எதிர் தரப்பினர் தடுத்துவிடுவர்.
தங்கள் அணிக்கு வந்துவிடுமாறு எதிர்த் தரப்பினர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு தொடர்ந்து பேசி வருகின்றனர்.
தற்போது 2 அமைச்சர்கள் தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர். உரிய நேரத்தில் அவர்கள் எங்கள் அணிக்கு ஆதரவை தெரிவிப்பார்கள்.
ஆட்சியை கலைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. முதல்வரை மாற்றவேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கையாக உள்ளது. எங்களை தினகரன் நல்லமுறையில் வழிநடத்துகிறார். என்றும் அவர் காட்டும் வழியில் செல்வேன் என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago