மேகேதாட்டுவில் அணை கட்ட தடையில்லா சான்று வழங்கப்பட்டதா?- மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் மழுப்பல்

By ஆர்.டி.சிவசங்கர்

மேகேதாட்டுவில் கர்நாடக மாநிலம் அணை கட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடையில்லா சான்று வழங்கப்பட்டதா என்ற கேள்வியை தவிர்த்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் மழுப்பலாக பதிலளித்தார். 

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று காலை முதுமலை புலிகள் காப்பகத்தை ஆய்வு செய்தார். பின்னர், கர்நாடக, கேரளா மற்றும் தமிழக வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் உள்ள அரங்கில் நடந்த கூட்டத்தில், தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ரகுராம் சிங், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் சீனிவாச ஆர்.ரெட்டி, கோவை மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்ரமணியம், கர்நாடக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஸ்ரீதர், வயநாடு வனச்சரணாலய வன உயிரின காவலர் என்.டி.சாஜன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். 

பின்னர் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷவர்தன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 

முதுமலை புலிகள காப்பகத்தில் வாழும்  மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க மத்திய அரசு ரூ.70 கோடி ஒதுக்கியுள்ளது. இத்திட்டம் மூலம் முற்கட்டமாக 235 குடும்பங்கள் வெளியேற்றப்படுவார்கள். மாநில அரசின் பங்களிப்பை விரைவில் அளிக்குமாறு கடிதம் எழுதவுள்ளேன். 

முதுமலை மற்றும் பண்டிப்பூர் புலிகள் காப்பகங்கள் சிறப்பாக பராமரிக்கப்படுவதன் காரணமாக புலிகள், யானைகள் மற்றும் பிற விலங்குகள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன.

கடந்த சில காலங்களில் கடும் வறட்சி நிலவியதால் தண்ணீர் பற்றாக்குறை பெரும் சவாலாக இருந்தது. இதை நிவர்த்தி செய்யும் வகையில், சூரிய மின்சாரத்தில் இயங்கும் நீயேற்று அமைப்புகள் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் நிறுவ வேண்டும். புலிகள் காப்பகத்தில் ஆக்கிரமித்துள்ள பார்த்தினியம் செடிகளை அகற்ற அறிவியல் ரீதியாக திட்டம் தயாரித்து செயல்படுத்த வேண்டும். 

மனித விலங்கு மோதல்கள் அதிந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. மனித உயிர் இழப்புக்கு ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க பரிசீலிக்கப்படும். பிரதமரின் புதிய இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து துறைகளிலும் செயல்படுத்த வேண்டிய  500 புதிய ஆலோசனைகளை தயாரித்து, மக்களிடம் பரப்பரப்படுகிறது. 

வனக்குற்றங்கள் புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் வனச்சட்டங்களில் உரிய திருந்தங்கள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படும். மத்தய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளால் நாட்டில் வனப்பரப்பு அதிகரித்துள்ளது. வனத்தை பாதுகாக்க அடர்ந்த வனப்பகுதிகளில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சிறப்பாக பணிபுரிகின்றனர். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட முற்படும் நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அதற்கு தடையில்லா சான்று வழங்கியுள்ளதா என கேட்டதற்கு, நேரடியாக பதிலளிக்காமல், ஒரு குறிப்பிட்ட திட்டம் குறித்து அமைச்சருக்கு தெரிந்திருக்க முடியாது. பல்வேறு குழுக்கள் மற்றும் வல்லுநர்கள் அளிக்கும் பரிந்துரையின் பேரிலேயே நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’ என்றார். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்