சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை சிறைக்குச் சென்று சந்தித்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு, காமராஜ், திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு நோட்டீஸ் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
வழக்கு விவரம்:
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு, காமராஜ், திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் ஆகியோரை தகுதி இழப்பு செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் ஆணழகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் தற்காலிக முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதன் பிறகு கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதித்ததையடுத்து, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், 22.02.17 அன்று அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கௌரி சங்கர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவினுடைய ஆலோசனை மற்றும் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசு வழிநடத்தப்படும் என கூறியிருந்தார். இதற்கு எந்த அமைச்சரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இதையடுத்து, பிப்ரவரி 28ஆம் தேதி அதிமுக செய்தி தொடர்பாளர் கௌரிசங்கரின் பேச்சை உறுதிப்படுத்தும் வகையில், அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு, திண்டுக்கல் ஸ்ரீனிவாசன், காமராஜ் ஆகியோர் சிறையில் சென்று சசிகலாவை பார்த்ததாகவும், அரசின் செயல்பாடுகள் குறித்து அவரிடம் பேசியதாகவும் கூறியிருந்தனர், இந்த செயல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 188 ஆவது சரத்திற்கும், அமைச்சராக பொறுப்பு ஏற்கும் போது எடுத்த ரகசிய காப்பு உறுதி மொழிக்கும் எதிரானது.
இந்த செயல்களுக்கு முதலமைச்சரும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. முதல்வர் மற்றும் அமைச்சர்களின் செயல்களானது அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் வகையில் உள்ளது. இதன்படி அரசும், முதல்வரும் சசிகலாவின் ஆலோசனைப்படி செயல்படுவது தெரிகிறது. இதற்கு அமைச்சர்கள் தூதுவர்களாக உள்ளனர். அரசியலமைப்புச் சட்டப்படிதான் அரசு இயங்க வேண்டும்.
ஆனால் சசிகலா உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டஒரு குற்றவாளி ஆவார். இதற்காக முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ பதவிகளை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென சபாநாயகருக்கும், சட்டப்பேரவை செயலருக்கும் கடந்த 13,16ஆம் தேதிகளில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நீதிமன்றம் தலையிட்டு நான் அளித்த மனுவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் வகையில் மனுவை கவர்னருக்கு அனுப்பி வைக்க சபாநாயகருக்கும், சட்டப்பேரவை செயலருக்கும் உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு, காமராஜ், திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் ஆகியோர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago