திருச்சி மாவட்டம் கே.சாத்தனூர் உட்பட தமிழகம் முழுவதிலும் 41 சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆன்-லைன் பத்திரப்பதிவு முறை இன்று (ஆகஸ்ட் 1) தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் பதிவுத் துறை தலைவர் அலுவலகம், 9 பதிவுத் துறை துணைத் தலைவர் அலுவலகங்கள், 3 முகாம் அலுவலகங்கள், 50 மாவட்டப் பதிவாளர் அலுவலகங்கள், 578 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் மாவட்டப் பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்களில் மட்டுமே பத்திரப் பதிவுகள் மேற்கொள்ளப்படு கின்றன.
இந்நிலையில், பத்திரப்பதிவை எளிமைப்படுத்தும் வகையில் ஆன்-லைன் பத்திரப்பதிவு முறையை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டது.
அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன் பதிவுத்துறை துணைத் தலை வர் சரகத்துக்கு ஒன்று வீதம் பெரம் பலூர், நாகப்பட்டினம் உட்பட தமிழ் நாடு முழுவதிலும் 9 சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆன்-லைன் பத்திரப் பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் கே.சாத்தனூர், புதுக்கோட்டை மாவட் டம் விராலிமலை, கரூர் மாவட்டம் குளித்தலை, தஞ்சாவூர் பதிவுத் துறை மண்டலத்துக்குட்பட்ட வல்லம், திருவிடைமருதூர், மதுக்கூர், சீர்காழி உட்பட தமிழ்நாடு முழுவதும் மேலும் 41 சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆன்-லைன் பத்திரப்பதிவு முறை இன்று (ஆகஸ்ட் 1) முதல் நடை முறைக்கு வரவுள்ளது.
இதன்மூலம் பதிவுத் துறையின் 50 மாவட்டங்களிலும் தலா ஒரு சார் பதிவாளர் அலுவலகம் ஆன்-லைன் பத்திரப்பதிவுக்கு இன்று முதல் மாறுகிறது.
இதுதொடர்பாக பதிவுத் துறை வட்டாரங்களில் கேட்டபோது, “வரை யறுக்கப்பட்ட சார் பதிவாளர் அலு வலகத்தில்தான் பதிவுகளை மேற் கொள்ள முடியும் என்ற கட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் நெடுந் தொலைவுக்கு பயணம் செய்ய வேண்டி யிருந்தது. இதனால், நேரிட்ட தொய்வு காரணமாக பதிவுத் துறைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது. எனவே, பத்திரப்பதிவை எளிமைப்படுத்தவும்- முறைகேடுகளைத் தடுக்கவும் ஆன்-லைன் பத்திரப்பதிவை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன்மூலம் எந்தப் பகுதியில் உள்ள சொத்தையும் எந்த சார் பதிவாளர் அலுவலகம் மூலமாகவும் பதிவு செய்ய முடியும். இதற்காக பதிவுத் துறை அலுவலர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது, ஆன்-லைன் பத்திரப் பதிவுடன் ஏற்கெனவே உள்ள வழக்கமான நடைமுறைப்படியும் பத்திரப்பதிவு நடைபெறும். ஓரிரு மாதங்களுக்குப் பிறகு முற்றிலும் ஆன்- லைன் நடைமுறை மட்டுமே பின்பற்றப்படும்.
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவல கங்களிலும் விரைவில் ஆன்- லைன் பத்திரப்பதிவு நடைமுறைக்கு வரவுள்ளது. அதன்பிறகு, ஒரு சார் பதிவாளர் அலுவலகத்தின் பதிவேடுகளையும் மற்றொரு அலு வலகத்தில் சரி பார்க்க முடியும்.
ஆன்-லைன் பத்திரப்பதிவின் மூலம் பத்திரப்பதிவுக்காக வெகு நேரம் காத்திருப்பது, அலுவலக நடை முறைகளில் நேரிடும் கால தாமதம், பத்திரப் பதிவு மற்றும் ஆவணங்களை வாங்க வருவதற்கான அலைக்கழிப்பு ஆகியன முற்றிலும் தவிர்க்கப் படும். போலி ஆவணம் மற்றும் முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப் படும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago