புதுச்சேரியில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தங்களுடைய ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியுள்ள சொகுசு விடுதிக்கு வெளியே தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உருப பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் 18 பேர் வேறு அணிக்கு மாறிவிடக்கூடாது என்பதற்காக புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் டிடிவி தினகரன் சட்டமன்ற உறுப்பினர்களை பணம்கொடுத்து இங்கு தங்க வைத்துள்ளதாகவும், சட்டமன்ற உறுப்பினர்களை சுதந்திரமாக வெளியே விடக்கோரியும், தினகரனை கண்டித்தும் இன்று காலை ஓபிஎஸ் அணியில் இருந்து செயல்பட்டு வந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓம்சக்தி சேகர் தலைமையில் அதிமுகவினர் சொகுசு விடுதியை முற்றுகையிட்டு டிடிவி தினகரனின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று மாலை டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியுள்ள சொகுசு விடுதிக்கு வெளியே தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எம்பி வைத்திலிங்கத்தின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவாகவும், ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
இரு தரப்பினரும் மாறி மாறி போராட்டம் நடத்தி வருவதால் சொகுசு விடுதி வளாகத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago