தற்போது உள்ள சூழ்நிலையில் நாம் அனைவரும் ராஜினாமா செய்துவிட்டு ஜெயலலிதா ஆட்சி அமைப்போம் என்ற கோரிக்கையுடன் தேர்தலை சந்திப்போம், டிடிவி தரப்பினர் அவர்கள் கோரிக்கையுடன் தேர்தலை சந்திக்கட்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அவரது ஆதரவு எம்.எல்.ஏ குன்னம் ராமச்சந்திரன் கோரிக்கை வைத்துள்ளார்.
அதிமுக அணிகள் இரண்டும் ஒன்றாக இணைந்த நிலையில் தமிழக அரசியல் களம் பரபரப்பாகி வருகிறது. தினகரன் தரப்புக்கு ஆதரவாக 21 எம்.எல்.ஏக்கள் திரண்டுள்ளனர். சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கினால் எதிர் நடவடிக்கை வரும் என்று பகிரங்கமாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பேட்டியளித்து வருகின்றனர்.
கட்சிக்கு எதிராக செயல்படுவதாக 19 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு கொறடா ராஜேந்திரன் பரிந்துரைக்க அவரையே பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளார் தினகரன்.
இருபுறமும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறிவந்த நிலையில் எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ குன்னம் ராமச்சந்திரன் சில நாட்களுக்கு முன் சசிகலா, தினகரன் இருவரையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இன்று எடப்பாடி ஆட்சியை கலைக்கவேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்ததாக பரபரப்பான தகவல் வெளியானது. இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினோம். அதற்குப் பதிலளித்து அவர் கூறியதாவது.
நான் தெரிவித்த பதிலை திரித்து செய்தி வெளியிட்டுள்ளனர். நான் சொன்னது இந்த ஆட்சியைப்பற்றி திமுக எம்.எல்.ஏக்கள் கூட கருத்து சொல்லாமல் சும்மா இருக்கிறார்கள் ஆனால் அதிமுக வேட்டி கட்டி, ஜெயலலிதா தயவில் பதவிக்கு வந்த எம்.எல்.ஏவெல்லாம், அண்ணா திமுக எம்.எல்.ஏக்கள் 21 பேர் இந்த ஆட்சியை ஊழல் ஆட்சி, ஊழல் ஆட்சி என்று திரும்பத் திரும்ப சொல்கிறார்கள்.
நான் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோளாக வைக்கிறேன். நாம் அனைவரும் ராஜினாமா செய்துவிட்டு ஜெயலலிதா ஆட்சியை அமைக்கிறோம் என்று தேர்தலில் நிற்போம், டிடிவி தினகரன் தரப்பினர் சசிகலா தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று தேர்தலை சந்திக்கத் தயாரா? என்று கேட்டேன்.
அப்படி சந்திக்கும் போது ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களும், வாக்காளர்களும் கொடுக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம். இந்த கோரிக்கையைத்தான் முதல்வருக்கு வைத்தேன்.
இதை ஆட்சியை கலைக்க வேண்டும் என ஆட்சிக்கு எதிராக பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. நான் அவ்வாறு கூறவில்லை என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago