மணலியில் தொடரும் மிகை காற்று மாசு: சுவாச நோய்கள் ஏற்படும் அபாயம்

By ச.கார்த்திகேயன்

மணலியில் தொடர்ந்து மிகை காற்று மாசு ஏற்பட்டு வருவதால், அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு நாட்பட்ட சுவாச நோய்கள் வரும் அபாயம் உள்ளது.

சென்னையில் தொழிற்சாலை கள் நிறைந்த பகுதியாக மணலி விளங்குகிறது. இப்பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தொழிற்சாலைகள் மற்றும் அதனால் ஏற்படும் கனரக வாகன போக்குவரத்தால், அப்பகுதியில் அண்மைக் கால மாக மிகை காற்று மாசு ஏற்பட்டு வருகிறது.

காற்றில் மிதக்கும் 2.5 மைக்ரோ கிராம் அளவுள்ள நுண்ணிய துகள்கள், ஒரு கன மீட்டர் காற்றில் எவ்வளவு உள்ளது என்பதன் அடிப்படையில் காற்று மாசு கணக்கிடப்படுகிறது. இவை ஒரு கன மீட்டர் காற்றில் 60 மைக்ரோ கிராம் வரை இடம்பெற்றிருப்பது, அனுமதிக்கப்பட்ட அளவாகும். ஆனால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மணலியில் 7 நாட்கள் மிகை காற்று மாசு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 17, 18 ஆகிய தேதி களில் அதிகபட்ச சராசரி அள வாக, காற்றில் உள்ள துகள் களின் அளவு, முறையே 362, 361 மைக்ரோ கிராமாக பதிவாகி யுள்ளது. அன்றைய தினங்களில் அதிகபட்சமாக முறையே 417, 500 மைக்ரோ கிராம் பதிவாகியுள்ளது.

சளித்தொல்லைகள்

அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, “இங்கு தொழிற்சாலைகள் இயங் கும்போது, நாம் சாப்பிடும் உணவில் கரித்துகள்கள் வந்து விழுகின்றன. இதனால் பலரும் ஆஸ்துமா, மூச்சுத் திணறல் மற்றும் தீராத சளித்தொல்லைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காற்று மாசுவை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றனர்.

இது தொடர்பாக சூழலியல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெய ராமன் கூறும்போது, “மணலி பகுதி பல ஆண்டுகளாக காற்று மாசுவால் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளால் ஏற்படும் காற்று மாசுவை தடுக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நட வடிக்கை எடுப்பதே இல்லை. தற்போதுள்ள நிலை, விஷவாயு நிரப்பிய அறையில் பொதுமக்கள் வசிப்பதற்கு சமமாக உள்ளது. எனவே காற்று மாசுக்கான காரணத்தை மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆராய்ந்து, அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதுபற்றி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர், அம் பத்தூர் பகுதி சுற்றுச்சூழல் பொறி யாளர் ஆகியோரிடம் கேட்டபோது, அவர்கள் பதிலளிக்கவில்லை. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணனிடம் இதுபற்றி கேட்டபோது, “மணலியில் காற்று மாசு ஏற்படுவதை தடுக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த புகார் தொடர்பாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

வசிப்பதை தவிர்க்க வேண்டும்

மிகை காற்று மாசுவால் ஏற் படும் பாதிப்புகள் குறித்து புதுச் சேரி ஜிப்மர் மருத்துவமனை நுரையீரல் நோயியல் பிரிவு இணை பேராசிரியர் ஆர்.மஞ்சு விடம் கேட்டபோது, “மிகை காற்று மாசு ஏற்பட்டால், மாசு துகள்கள் நுரையீரலில் நிறைந்து, ஆக்சிஜனை பிரித்தெடுக்கும் திறன் குறைந்து, உடலுக்கு ஆக்சிஜன் பரவுவது பாதிக்கப்படும் இதனால் மூச்சுத்திணறல் ஏற்படும். ஒவ்வாமையால் சளி பிடிக்கும். மாசு நிறைந்த காற்றை வடிகட்டும் திறனை நுரையீரல் இழந்துவிடும்.

காற்று சுத்திகரிப்பு கருவி

இதே நிலை தொடரும்போது, நுரையீரல் சுருங்கி, நாட்பட்ட மூச்சுக்குழல் அடைப்பு நோய், ஆஸ்துமா ஆகிய நோய்கள் ஏற்படும். இதைத் தவிர்க்க, அந்த இடத்தில் வசிப்பதை தவிர்ப்பது நல்லது. அங்கேயே வசிக்க வேண்டியிருந்தால் வீட்டின் வாயில், ஜன்னல் கதவுகளை மூடி வைக்க வேண்டும். வசதி இருந்தால் காற்று சுத்திகரிப்பு கருவிகளை பயன்படுத்தலாம். அரசு சார்பில் அப்பகுதியில் அதிக அளவில் மரங்களை நட வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்