அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் திரையுலக பிரதிநிதிகள் சந்திப்பு

தமிழக செய்தித் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, தமிழ் திரையுலக கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று சந்தித்து பேசினர்.

இதுகுறித்து இயக்குநர் சங்கத்தலைவர் விக்ரமன் நிரு பர்களிடம் கூறியதாவது :

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அதன் செயலாளர் டி.சிவா, துணைத்தலைவர் டி.ஜி.தியாகராஜன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பெப்சி) சார்பில் செயலாளர் கே.ஆர்.செல்வராஜூ, பொருளாளர் எஸ்.ஆர் சந்திரன், இயக்குநர் சங்கம் சார்பில் என்னுடன் ரமேஷ் கண்ணா, ரவிமரியா உள்ளிட்டோர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சந்திந்தோம். இந்த சந்திப்பின்போது திருட்டு விசிடிக்கு எதிராக 16-ம் தேதி சென்னையில் நாங்கள் நடத்தவுள்ள கூட்டம் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து பேசினோம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE