தனது உடல்மொழியாலும், வசன உச்சரிப்பாலும் மதுரை தமிழில் பேசி ரசிகர்களை கவர்ந்தவர் நகைச்சுவை நடிகர் அல்வா வாசு (54). 900-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்தவர். கடந்த ஓராண்டாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், கடந்த 17-ம் தேதி இரவு காலமானார்.
அவருக்கு அமுதா (45) என்ற மனைவியும், 6-ம் வகுப்பு படிக்கும் கிருஷ்ண ஜெயந்திகா என்ற மகளும் உள்ளனர். திருமணமான முதல் 15 ஆண்டுகள் வாசு குடும்பத்துடன் சென்னையில் வசித்துள்ளார். கடந்த 6 ஆண்டாக மதுரை அருகே சமயநல்லூரில் மனைவி, குழந்தையை வைத்துவிட்டு வாசு மட்டும் சென்னை வடபழனியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி சினிமாவில் நடித்து வந்துள்ளார். படப்பிடிப்பு இல்லாதபோது மனைவி, குழந்தையைப் பார்க்க மதுரை வந்து சென்றுள்ளார். உடல்நலக் குறைவால் கடந்த ஓராண்டாகவே எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.
‘‘சினிமா என்பது மிலிட்டரிக்காரன் தொழில் மாதிரி. 10 நாள் இந்த தொழிலில் இல்லைன்னா மறந்துடுவாங்க’’ என்று குடும்பத்தினரிடம் அடிக்கடி சொல்வாராம். அவருக்கு அஞ்சலி செலுத்த நடிகர் சங்க முக்கிய நிர்வாகிகள், முக்கிய காமெடி நடிகர்கள் வராதது, அவர் கூறியது உண்மைதானோ என்று நினைக்க வைத்தது.
‘ஒரு வருஷமா நடிக்கல. 6 மாசமா சிகிச்சையில இருந்தார். இது சினிமாக்காரங்களுக்கு தெரியாதா?’ என்று ஆதங்கப்பட்டனர் உறவினர்கள். ஆனால், அவரது மனைவி அமுதாவோ, ‘‘எங்களுக்கு யார்மேலயும் எந்த வருத்தமும் இல்லை. ஏன்னா, அவர் சினிமாவில் பிஸியாக இருந்தப்பவே, தீபாவளி, பொங்கலுக்குக்கூட எங்ககூட இருக்கமாட்டார். ‘சினிமாங்கறது மிலிட்டரிக்காரன் தொழில் மாதிரி.. 10 நாள் இந்த தொழில்ல இல்லன்னா மறந்துடுவாங்க’ன்னு சொல்வார். அவரைப் போலத்தான், அவருடன் நடிச்சவங்களையும் பார்க்கிறேன். சூழ்நிலை, வேலை காரணமாக வராம போயிருக்கலாம்.
‘நம் கஷ்டத்தை சொல்லி அனுதாபம் தேடக் கூடாது’ன்னு சொல்வார். அதான் அவர் மருத்துவமனையில் இருந்ததை யாரிடமும் சொல்லவில்லை. வீட்டில் விசேஷம் என்பதால் வரமுடியல்லைன்னு விஷால் போனில் வருத்தப்பட்டார். கார்த்தி பேசினார். குழந்தையின் படிப்புக்கும், எதிர்காலத்துக்கும் உதவி செய்றதா சொல்லி இருக்காங்க. சிலர் உதவி செய்திருக்காங்க. நடிகர் சங்கம் சார்பில விக்னேஷ் வந்தார். வடிவேலு சார் வரலைன்னாகூட எந்த வருத்தமும் இல்லை’’ என்றார்.
ஒரு வாரம் முன்பு, வடபழனியில் தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்யச் சொல்லுமாறு மனைவியிடம் கூறியுள்ளார் வாசு. 3 மாத வாடகை பாக்கி பணத்தோடு, வீட்டு உரிமையாளருக்கு ஒரு கடிதம் எழுதி மனைவியிடம் கொடுத்துள்ளார். ‘‘இத்தனை ஆண்டு காலமாக தங்க வீடு கொடுத்து, குடும்பத்துல ஒருத்தனா என்னைப் பார்த்துக்கொண்டதற்கு நன்றி’’ என உருக்கத்தோடு அதில் எழுதியுள்ளார் வாசு. ‘‘யாரு மனசும் புண்படக் கூடாது என நினைச்சவரு. அவரைப் போலத்தான் நாங்களும். யாரையும் குற்றம் சொல்ல விரும்பல’’ என்று கண்கலங்கினார் அவரது மனைவி.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago