தென்மேற்கு பருவமழை: நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரியில் ஏமாற்றம்

By த.அசோக் குமார்

தமிழகத்தில் கடந்த வாரங்களாக தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்வதால், இயல்பைவிட 33 சதவீதம் கூடுதலாகப் பதிவாகியுள்ளது. எனினும், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில் மட்டும் குறைவான மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை மிகவும் குறைவாகவே பெய்தது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை தொடக்கத்தில் குறைவாகவே பெய்தது. கடந்த 2 வாரங்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை, தருமபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், திருவள்ளூர், தூத்துக்குடி, வேலூர் மாவட்டங்களில் இயல்பான அளவுக்கு மழை பெய்துள்ளது. கடலூர், திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருப்பூர், திருச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாக (20 சதவீதம் முதல் 59 சதவீதம் வரை கூடுதல்) மழை பெய்துள்ளது.

அரியலூர், கோவை, கரூர், பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவண்ணாமலை, திருவாரூர், விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இயல்பைவிட மிகவும் அதிகமாக (60 சதவீதத்துக்கு மேல்) மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி, நீலகிரி, திருநெல்வேலி மாவட்டங்களில் மட்டும் தென்மேற்கு பருவமழை தொடர்ச்சியாக ஏமாற்றம் அளித்து வருகிறது. இந்த மாவட்டங்களில் இயல்பைவிட குறைவான அளவிலேயே மழை பெய்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்துக்கு 184 சதவீதம் கூடுதல் மழை கிடைத்துள்ளது. குமரி மாவட்டத்தில் 45 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 secs ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்