தமிழகத்தில் 8 மாதங்களில் டெங்குவால் 15 பேர் பலி: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

By கி.மகாராஜன்

 

தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் டெங்குவால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர் மதுரை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கொசு உற்பத்தி பெருகி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த ஆண்டு கொசுவால் டெங்கு, சிக்கன்குனியா போன்ற மர்ம காய்ச்சலுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொசு உற்பத்தியைத் தடுக்கவும், கொசுக்களை ஒழிக்கவும் உறுதியான நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்த போதிலும் கொசுக்கள் உற்பத்தியாகிவரும் கழிவுநீர் கால்வாய்களை சுத்தப்படுத்தவும், குப்பைகளை அகற்றவும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, தமிழகம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவசமாகக் கொசு வலை வழங்கவும், அரசு மருத்துவமனையில் டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா உள்ளிட்ட கொசுவால் பரவும் நோயால் பாதிக்கப்படுவோருக்கு தனி வார்டு அமைக்கவும், தேவையான மருந்து, மாத்திரைகளை இருப்பில் வைக்கவும், அவர்களை 24 மணி நேரமும் கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மை செயலர் தரப்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட்து. அதில், ''தமிழகத்தில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை டெங்குவால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். திருப்பூரில் 4, ஈரோட்டில் 3, கோவை 3, நெல்லை, திருச்சி, தர்மபுரி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் முறையே ஒருவர் என 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிக்கன்குனியா காய்ச்சலால் உயிரிழப்பு இல்லை. பிற காய்ச்சல்களால் 32 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 13,840 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 420 நடமாடும் மருந்து வாகனங்கள், 770 நடமாடும் சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் டெங்கு பரிசோதனை மையங்கள் 30லிருந்து 90ஆக உயர்த்தப்பட்டுள்ளன'' எனக் குறிப்பிடப்பட்டிருந்த்து.

அரசு வழக்கறிஞர், சுமார் 13 ஆயிரம் கொசு வகைகள் உள்ள நிலையில், கொசுவை ஒழிப்பது என்பது இயலாத ஒன்று. ஆனால் அவற்றைக் கட்டுப்படுத்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார். பின்னர் வழக்கின் தீர்ப்பினை செப்டம்பர் 4-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்