டெல்லி தேர்தலில் தேமுதிக மீண்டும் போட்டியிடாது: விஜயகாந்த் முடிவு

கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த தேமுதிக, தமிழர்கள் அதிகம் வசிக்கும் 11 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது.

விஜயகாந்த், அவரது மனைவி பிரேம லதா, மைத்துனர் எல்.கே.சுதிஷ் எம்.எல்.ஏ.க்கள் பால அருட்செல்வன் மற்றும் அனகை முருகேசன் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் செய்தனர். ஆனால் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் தொகையை இழந்தனர்.

அதிகபட்ச வாக்குகள் 390

இதுகுறித்து டெல்லி தேமுதிக நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 2000 வாக்குகள் கிடைத்தால் அதை வைத்து அடுத்தடுத்த தேர்தல்களில் பிற கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம் என கட்சி தலைமை திட்டமிட்டிருந்தது. ஆனால், அதிகபட்சமாக 390 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால், இனி டெல்லி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என விஜயகாந்த் கூறி விட்டார்” என்றனர்.

இதுபற்றி ‘தி இந்து’விடம் டெல்லி தேமுதிக செயலாளர் வி.என்.தட்சிணாமூர்த்தி கூறும்போது, “கடந்த தேர்தலின்போது நம் கட்சி மீதான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் நோக்கம் என எங்கள் தலைவர் கூறியது போல் செய்து விட்டார். இங்கு வரும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மலேசியா விலிருந்து நாடு திரும்பிய பிறகு எங்கள் தலைவர் கட்டளையிட்டால் போட்டியிடத் தயாராக இருக் கிறோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE