பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் பார்வை மாற்றுத்திறனாளிகள், முதியோர் என அனைத்துத் தரப்பும் ஒரே இடத்தில் நட்பாகக் கூடியமர்ந்து படிக்கும் விதமாக பிரம்மாண்ட நூலகம் ஒன்று புதுச்சேரியில் உருவாகிக் கொண்டிருக்கிறது.
புதுச்சேரி மூலக்குளம் அருகேயுள்ள சிங்கப்பூர் அவென்யூ. இங்கே 3,500 சதுர அடியில் இரண்டு தளங்களுடன் தயாராகி நிற்கிறது அந்த நூலகக் கட்டிடம். மழை நீர் சேகரிப்பு அமைப்பு உள்பட முற்றிலும் சுற்றுச் சூழலுக்கு உகந்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நூலகத்தில் கூடுதலான சில சிறப்பு அம்சங்களும் அமையப்போவதாகச் சொல்கின்றனர் இந்த நூலகத்தை படைக்கும் ‘நந்தலாலா சேவாசமிதி அறக்கட்டளை’யினர்.
மதி ஒளி சரஸ்வதி
இந்த நூலகத்தில் அப்படி என்ன விசேஷம் இருக்கப் போகிறது? பதில் தருகிறார் நந்தலாலா சேவாசமிதி அறக்கட்டளையின் ராஜகோபால், “நந்தலாலா சேவா சமிதி அறக்கட்டளை நிறுவனர் மதி ஒளி சரஸ்வதி புதுச்சேரியை சேர்ந்தவர். அவர் பல நூல்களை எழுதி யுள்ளார். இந்த அறக்கட்டளை சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் செயல்படுகிறது. மதி ஒளி சரஸ்வதி பிறந்த ஊரில் இலவச நூலகம் ஒன்றை புதுமையாக உருவாக்க வேண்டும் என்பது அறக்கட்டளையின் விருப்பம்.
அதை நிறைவேற்றும் விதமாகத்தான் இந்த நூலகத்தை தொடங்குகிறோம். முன்னதாக, புதுச்சேரி மக்கள் என்ன விதமான நூல்களை விரும்பிப் படிக்கி றார்கள், அவர்களுக்கு எந்த மாதிரியான நூல்கள் தேவை என்பது குறித்து அனைத்துத் தரப்பினர் மத்தியில் ஆய்வு ஒன்றை நடத்தினோம். அந்த ஆய்வுகளின் முடிவுகளுக்கு ஏற்ப இந்த நூலகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
குழந்தைகளுக்கு பிரத்யேக நூலகம்
தரைத் தளத்தில் 20 ஆயிரம் புத்தகங்களுடன் அமையும் நூலகத்தில் இலக்கியம், வரலாறு, ஆன்மிகம் தொடங்கி பல்வேறு தலைப்புகளில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தியில் புத்தகங்கள் வாசிக்கக் கிடைக்கும். அனைத்து விதமான செய்தித் தாள்களையும் பருவ இதழ்களையும் இங்கே படிக்கலாம். இதில்லாமல், பார்வை மாற்றுத்திறனாளி களும் படித்துப் பயன்பெறும் வகையில் பிரெய்லி நூலகம் ஒன்றும் இங்கே அமைகிறது.
முதல் தளத்தில் குழந்தைகளுக்கான நூலகம் வருகிறது. இங்கு மட்டுமே 7 ஆயிரம் புத்தகங்களை அடுக்கப் போகிறோம். குழந்தைகளை ஈர்த்து உட்கார வைக்கும் வகையில் இந்த நூலக அறை சிறப்புக் கவனமெடுத்து வடிவமைக்கப்படுகிறது. இங்கே குழந்தைகள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை திரையிடும் திட்டமும் உள்ளது.
முழுக்க முழுக்க இலவச நூலகம் இது. இங்கே புத்தகங்களை இலவசமாக படிக்கலாம். புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்க வேண்டும் என்று விரும்புவோரிடம் குறைவான கட்டணம் வசூலித்துக் கொண்டு புத்தகங்களைத் தரலாம் எனத் திட்டமிடு கிறோம். படைப்பு நூல்கள் மட்டுமில்லாது, கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான படிப்பு நூல்களும் இந்த நூலகத்தில் இருக்கும்.” என்கிறார் ராஜகோபால்.
மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படும்
நூலகத்தில் சிறு கருத்தரங்க கூடமும் வடிவமைக் கப்படுகிறது. இங்கு, உரையாடல் மற்றும் குழந்தை களுக்கு ஆங்கில மொழித் திறனை மேம்படுத்தும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதுடன் தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக்களான பல்லாங்குழி, தாயம் உள்ளிட்டவைகளை கற்றுத் தரவும் ஏற்பாடு செய்யப்படுமாம். வயதானவர்கள், முதல் தளத்துக்குச் செல்ல விரும்பினால் அதற்கான லிஃப்ட் வசதியும் வைத்திருக்கிறார்கள்.
இந்த அறக்கட்டளைக்கு சென்னையில் டயாலிசிஸ் மையம் ஒன்று செயல்படுகிறது. அதுபோல இந்த நூலகத்தில் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் இலவச மருத்துவ சேவையை அளிக்கும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாகச் சொல்லும் ராஜகோபால், “இந்தப் பணிகள் அனைத்தையும் இன்னும் ஓரிரு மாதங்களில் முடித்து, அக்டோபரில் ‘மதி ஒளியின் அரிச்சுவடி’ என்ற இந்த நூலகத்தைத் திறக்க இருக்கிறோம். சமூக ஆர்வலர்கள் யாராவது இந்த நூலகத்துக்கு புத்தகங்களை அன்பளிப்பாகத் தரவிரும்பினால் ஏற்கத் தயாராய் இருக்கிறோம். நூலகத்தைப் பற்றி மேலும் தகவல்களை அறிய விரும்புவோர் 0431 2292299 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago