சேலத்தில் அரசு பொதுத் துறை அலுவலகம் துவக்கிய போலி ஐஏஎஸ் அதிகாரி கைது: போலீஸ் விசாரணை

By வி.சீனிவாசன்

சேலத்தில் அரசு பொதுத் துறை அலுவலகத்தை துவக்கி, தமிழக தலைமை செயலாளர் கையெழுத்தை போலியாக பயன்படுத்திய போலி ஐஏஎஸ் அதிகாரியை மாநகர குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவரின் உதவியாளராக இருந்தவரையும் போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

சேலம் நாராயணன் நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ஸ்ரீதர்(30). இவர் நேற்று ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜய்பாபுவை சந்தித்து, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வையத்தியநாதன் கையொப்பமிட்ட, அரசு பொதுத் துறை (ஆய்வு) இணை இயக்குநர் பணிக்கான ஆணையை காட்டி, ஆட்சியர் அலுவலகத்தில் தனக்கு ஒரு அறை ஒதுக்கி கொடுக்கும்படி கேட்டுள்ளார். ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜய்பாபு, ஸ்ரீதர் அளித்த ஆணையின் மீது சந்தேகம் கொண்டு, அவரை அறையில் அமர வைத்துள்ளார்.

பின், இந்த அரசாணை குறித்து விசாரணை செய்திட மாநகர குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜய்பாபு புகார் அளித்தார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீஸார் விசாரணையில், சேலம், கிச்சிப்பாளையத்தில் உள்ள வஉசி நகரில் பொதுத்துறை (ஆய்வு) இணை இயக்குநர் அலுவலகம் என்ற பெயர் பலகை வைத்து, மூன்று மாதமாக ஸ்ரீதர் அலுவலகம் துவக்கியுள்ளார். மேலும், வேம்படிதளத்தை சேர்ந்த ராமசுந்தரம் என்பவரை உதவியாளராகவும், மற்றொருவரை கார் டிரைவராக பணி நியமன ஆணை வழங்கியுள்ளார். தமிழக அரசு முத்திரையை வாகனத்தில் பயன்படுத்தி ஸ்ரீதர் உலா வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, போலி ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதரை மாநகர குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து, தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும், அவரின் உதவியாளரான ராமசுந்தரத்தையும் போலீஸார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். போலீஸார் ஸ்ரீதரிடம் நடத்தப்படும் முழு விசாரணையிலேயே அவர் போலி ஐஏஎஸ் போர்வையில் எவ்வளவு மாதமாக சுற்றி வந்துள்ளார். யாரிடமாவது பண மோசடி செய்துள்ளாரா, வேறு யாருக்கேனும் பணி ஆணை போலியாக வழங்கியுள்ளரா என்ற விவரங்கள் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்