தினகரன் அணியில் இருந்து வெளியேறுகிறாரா தோப்பு வெங்கடாசலம்? - தினகரனுக்கான ஆதரவு குறித்து பதிலளிக்க மறுப்பு

By எஸ்.கோவிந்தராஜ்

‘அணிகள் ஒன்றாக இணைய வேண்டும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு உரிய மரியாதை தர வேண்டும் என ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன். அதில் இருந்து இப்போது நான் மாற்றிப்பேச முடியாது’ என்று பெருந்துறை எம்எல்ஏ தோப்பு என்.டி. வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முதல்வர் பழனிசாமிக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து வந்தார் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம். இந்நிலையில், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் போர்க்கொடி தூக்கியபோது, அவரது ஆதரவாளராகத் தன்னைக் காட்டிக் கொண்டார். தோப்பு வெங்கடாசலத்தை கட்சியின் அமைப்புச் செயலாளராக தினகரன் அறிவித்தார்.

அதன்பின், தினகரன் நடத்திய ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றதோடு, மதுரை மேலூரில் தினகரன் நடத்திய பொதுக் கூட்டத்திலும் தோப்பு வெங்கடாசலம் பங்கேற்றார். ஆனால், கடந்த ஒரு வாரமாக அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வந்தபோது, தினகரன் தலைமையில் நடந்த ஆலோசனைகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார்.

சென்னையில் அதிமுகவின் இரு அணிகளும் நேற்று இணைந்த நிகழ்ச்சியில், தினகரன் ஆதரவாளராக இருந்து பதவிகளைப் பெற்ற பல நிர்வாகிகள் அதில் கலந்து கொண்டனர். எனினும், தோப்பு வெங்கடாசலம் சென்னைக்கு செல்லாமல் பெருந்துறையிலேயே தங்கி அமைதி காத்தார்.

இந்நிலையில், தனது நிலைப்பாடு குறித்து தோப்பு வெங்கடாசலம் ‘தி இந்து’விடம் கூறியதாவது: கட்சி ஒன்றாக சேர வேண்டும் என்றுதான் ஆரம்பம் முதல் சொல்லி வருகிறேன். அணிகள் ஒன்று சேர்ந்த நிலையில் அது எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது.

நாளை விரிவாக பேசுகிறேன்

அணிகள் ஒன்று சேர வேண்டும்; ஓ.பன்னீர்செல்வத்துக்கு உரிய மரியாதை தர வேண்டும் என ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். அப்படிச் சொல்லிவிட்டு இப்போது மாற்றிச் சொல்ல முடியாது. நாளை (23-ம் தேதி) எனது கருத்தை விரிவாக தெரிவிக்கிறேன் என்றார்.

தினகரனுக்கு ஆதரவு தொடருமா என்று கேட்டபோது தோப்பு வெங்கடாசலம் பதில் அளிக்கவில்லை.

இதன் மூலம் தினகரன் ஆதரவாளராக அவர் தன்னை காட்டிக்கொள்ள விரும்பவில்லை என்பதும், இணைப்பை ஏற்கும் வகையிலேயே அவரது கருத்து வெளிப்பட்டுள்ளதும் தெரியவருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்