அரிய இதய அறுவை சிகிச்சை: குளோபல் மருத்துவமனை சாதனை

By செய்திப்பிரிவு

விபத்தால் இதயம் கிழிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் வந்த கூலித் தொழிலாளியை அரிதான அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றி சென்னை குளோபல் மருத்துவமனை சாதனை புரிந்துள்ளது.

சேலத்தைச் சேர்ந்த கணேசன் (23) கட்டுமான கூலித் தொழிலாளி. இவர் பணியில் இருந்தபோது விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்தார். உடனடியாக குளோபல் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதனை செய்தபோது அவரது இதயத்தில் கடுமையான காயம் ஏற்பட்டிருப்பது தெரிந்தது. மேலும் இதய அழுத்தம் காரணமாக கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு, இதய உறையில் ரத்தம் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அறுவை சிகிச்சையின்போது இதய உறை திறக்கப்பட்டு அதில் சேர்ந்திருந்த 2 லிட்டர் ரத்தம் ரத்த மறுசுழற்சி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு மீண்டும் உடலில் செலுத் தப்பட்டது. 3 செ.மீ. அளவுக்கு கிழிந்திருந்த இடது இதய ஊற்றறை மற்றும் நுரை யீரல் சிரை ஆகியவை சரி செய்யப்பட்டன.

இது குறித்து இம்மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் கோவினி பாலசுப்பிரமணி கூறும் போது, “இதயம் கிழிந்த நோயாளியைக் காப் பாற்றும் அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலான தாகும். இத்தகைய நோயாளிகள் உயிர் பிழைக் கும் வாய்ப்பு மிகக் குறைவே. எனினும் அவருக்கு இதய நுரையீரல் பைபாஸ் அறுவை சிகிச்சையான ஸ்டெர்னாடமி செய்யப்பட்டது. தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE