தமிழக மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளதை தமிழக பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கின்றது.
தமிழக மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தியும், பைப், கல் மற்றும் கம்புகளாலும் சரமாரியாக நம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியுள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் இந்த செயல் காட்டுமிராண்டித்தனமானது. இரு நாட்டு மீனவர்களிடையே பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில் இது போன்ற நடவடிக்கைகள் மீனவர்கள் பிரச்சனையில் தீர்வு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் இலங்கை அரசு இருப்பதையே காட்டுகிறது.
மத்திய அரசு உடனடியாக தமிழக மீனவர்களின் பாதுகாப்பிற்கு உறுதி செய்ய வேண்டுமென தமிழக பாரதிய ஜனதா கட்சி அரசை கேட்டுக் கொள்கிறது". இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago