புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அதிமுக எம்எல்ஏ ஒருவரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளார்.
புதுச்சேரியில் நடப்பாண்டில் 395 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதில், அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் உட்பட 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவது புதுச்சேரி மக்களை பீதிக்கு ஆளாக்கியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ராமனிடம் கேட்டபோது, ‘புதுச்சேரியில் மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே டெங்கு காய்ச் சல் பரவத் தொடங்கி உள்ளது. எம்எல்ஏ உட்பட 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 3 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் டெங்கு வேகமாக பரவி வந்தது. அதுபோல் புதுச்சேரியில் அதிகளவில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
டெங்கு காய்ச்சலை தடுக்க கடந்த 3 நாட்களாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. தேவையான மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி அரசு தலைமை மருத்துவமனை, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் டெங்கு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பிராந்தியங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் செல்போனில் விழிப்புணர்வு எஸ்எம்எஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளோம்’ என்று குறிப்பிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago