ஆவணப்பட இயக்குநர் திவ்யபார தியை போலீஸார் நேற்று திடீரென கைது செய்தனர். நீதிமன்றம் அவரை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது.
மதுரை ஆஸ்டின்பட்டியைச் சேர்ந்தவர் திவ்யபாரதி. சமூக செயற்பாட்டாளர். துப்புரவு பணி யாளர் நலனுக்காக பல ஆண்டு களாக போராடி வருகிறார். கடந்த ஆண்டு ‘கக்கூஸ்’ என்ற பெய ரில் துப்புரவு பணியாளர்கள் எதிர் கொண்டு வரும் கொடுமைகளை விவரித்து ஆவணப்படம் தயாரித்து வெளியிட்டார். இப்படத்தை தமிழ கத்தில் வெளியிட தடை விதிக்கப் பட்டது. அதே நேரத்தில் கேரள மாநி லத்தில் இந்த ஆவணப்படத்துக்கு விருது வழங்கப்பட்டது. இவர் மீது, மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, பொதுச் சொத்தை சேதப்படுத்தி யது தொடர்பாக 2009-ம் ஆண்டில் மதிச்சியம் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கின் கடைசி 2 விசாரணைக்கு ஆஜராகாததால், திவ்யபாரதிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், ஆனையூரில் திவ்யபாரதியையும், இதே வழக் கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட முகைதீன் என்பவரை நாகனாகுளத் திலும் போலீஸார் நேற்று கைது செய்தனர். இருவரையும் மதுரை 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நீதிபதி சக்திவேல் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். திவ்யபாரதியை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் ஒரு வாரம் நீதிமன்றத்தில் கையெ ழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை யின்பேரில் திவ்யபாரதிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
2 வாய்தாவுக்கு ஆஜராகவில்லை
மதுரையில் 2009-ம் ஆண்டில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கி, மன்னர் கல்லூரியில் பயின்று வந்த ரமேஷ் என்பவர் பாம்பு கடித்ததில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என குற்றம்சாட்டியும், உயிரிழந்த ரமேஷ் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரியும், அப்போது மதுரை சட்டக் கல்லூரியில் பயின்ற திவ்யபாரதி தலைமையில் மாணவர்கள் போராட்டம் நடத் தினர். இதில் அரசு வாகனங்கள் கல்வீசி தாக்கப்பட்டன. இது தொடர்பாக திவ்யபாரதி உட்பட 9 பேர் மீது மதிச்சியம் போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக் குப் பதிவு செய்தனர். இந்த வழக் கின் கடைசி 2 விசாரணைக்கு திவ்ய பாரதி நீதிமன்றத்தில் ஆஜராக வில்லை. இதையடுத்து அவ ருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக் கப்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் திவ்ய பாரதி செய்தியாளர்களிடம் கூறிய தாவது: மக்களுக்காக போராட்டம் நடத்துபவர்களை ஒடுக்க தமி ழக அரசு முயற்சிக்கிறது. பழைய வழக்குகளை தூசிதட்டி போராளிகளை மிரட்டுகிறது. இதற்கு பயப்படமாட்டோம். இந்த வழக்கை சட்டப்படி சந்திப்போம் என்றார். துப்புரவு பணியாளர்கள் நல னுக்கான போராட்டத்தில் ஈடுபட்ட தாலும், ‘கக்கூஸ்’ ஆவணப் படம் மூலமும் மாநிலம் முழுவதும் அறி யப்பட்ட திவ்யபாரதி, கல்லூரிக் காலங்களில் இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) மாணவர் பிரிவில் இருந் துள்ளார். குற்ற வழக்கு நிலுவை யில் இருப்பதால் சட்டப் படிப்பை முடிந்தும் பார் கவுன்சிலில் பதிவு செய்ய முடியாமல் உள்ளார்.
அச்சுறுத்தும் நடவடிக்கை
இதுகுறித்து மக்கள் சிவில் உரிமைக் கழக பொதுச் செயலர் ஆர்.முரளி கூறியதாவது: வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது, திவ்யபாரதி கைது போன்ற அரசின் நடவடிக்கைகள் சமூக நலனுக்கு போராடுபவர்களை அச்சுறுத்தும் செயலாகும். அதிலும் குறிப்பாக பெண்கள், இளைஞர் களை அச்சுறுத்தும் செயலில் இறங்கியுள்ளனர். சட்ட விதிகளை மீறி, எல்லா அதிகாரங்களையும் செலுத்தி, ஜனநாயகத்தின் குரலை ஒடுக்கப்பார்க்கின்றனர். குறைகளை சுட்டிக்காட்டுவது, கருத்துகள் தெரிவிப்பது உரிமை ஆகும். அந்த உரிமையை முடக்கும் வேலை நடைபெற்று வருகிறது. நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்கள் மீது மாவோயிஸ்ட், நக்சலைட்டுகள் என முத்திரை குத்துகின்றனர். உரிமைக்கான போராட்டங்களை சட்டப்படிதான் அரசு அணுக வேண்டும். அதை செய்யாமல் ஜனநாயக குரலை ஒடுக்குவது மிகப்பெரிய தவறு என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago