20 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மாநகர பஸ் ஊழியர் வீட்டுமனை திட்டம் 4 மாதங்களில் நிறைவேற்றப்படும்: அனுமதி கிடைத்ததும் தையூரில் ‘லே-அவுட்’

By டி.செல்வகுமார்

மாநகரப் போக்குவரத்து தொழிலாளர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள தையூர் வீட்டுமனைத் திட்டத்தை அடுத்த 4 மாதங்களில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரப் போக்கு வரத்துக் கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி ஏற்படுத்தித் தரும் நோக்கில் பல்லவன் போக்குவரத்துக் கழக கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் உருவாக்கப்பட்டது. இது கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. கடந்த 1997-ல் இச்சங்கம் மூலம் 1,357 தொழிலாளர்களுக்கு வீட்டுமனை வழங்க கேளம்பாக்கம் திருப்போரூர் இடையே உள்ள தையூர் கிராமத்தில் 87.89 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. 1,200 சதுரஅடி முதல் 1,800 சதுரஅடி வரை முறையே ரூ.15,000 மற்றும் ரூ.22,500 வீதம் பணம் வசூலிக்கப்பட்டது.

இத்திட்டம் கடந்த 19 ஆண்டு களாக நிறைவேற்றப்படாத தால், சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நீண்டகாலமாக தங்களது வீட்டுமனைத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சென்னை பெரு நகர வீட்டுவசதி சங்க துணைப் பதிவாளர் நீதிமோகன் கூறியதாவது:

மாநகரப் போக்குவரத்து தொழி லாளர்களின் வீட்டுமனைத் திட்டத் துக்காக வாங்கப்பட்ட இடம் உள்ளிட்ட பகுதிகளில் துணை நகரம் அமைக்க அரசு திட்டமிட்ட தால் அங்கு லே-அவுட் போடப்பட வில்லை. அப்பகுதியில் அனைத்து இடங்களையும் அரசு எடுத்துக் கொள்ள இருப்பதால், எந்த லே-அவுட்டும் போடக்கூடாது என்று அரசு உத்தரவிட்டது. இதனால் 16 ஆண்டுகளுக்கு மேல் தாம தமானது. பின்னர் துணைநகரம் வரப்போவதில்லை என்று தெரிந்த பிறகு, வீட்டுமனைத் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்த இடத்துக்கும் பழைய மாமல்லபுரம் சாலைக்கும் இடையே அணுகுசாலை இல்லை. அணுகுசாலை போடவேண்டிய பகுதி நீர்வழிப் போக்கு இடமாக இருப்பதால் பொதுப்பணித் துறை அனுமதி அளிக்கவில்லை. இதனால், ‘உரிய பணம் செலுத்திவிடுகிறோம். அந்த இடத்துக்கு ஆட்சேபமில்லா சான்று வழங்க வேண்டும்’ என்று கோரி வருவாய்த் துறைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. நீர் வழிப் போக்கு உள்ள இடத்தில் மேம்பாலம் கட்டிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று பொதுப்பணித் துறையிடமும் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இந்த 2 துறைகளின் அனுமதி கிடைத்ததும், லே-அவுட் போடுவதற்கான பணிகள் தொடங்கும். அடுத்த 4 மாதங்களில் இப்பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக நகர் மற்றும் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) வழங்கும் அங்கீகாரத்தின்படியே மாநகரப் போக்குவரத்து தொழிலாளர் களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் உள்ளிட்ட இடஒதுக்கீடு அடிப்படையிலேயே டிடீசிபி அங்கீகாரம் வழங்கும். இந்த அங்கீகாரம் கிடைத்ததும், குலுக்கல் முறையில் வீட்டுமனை ஒதுக்க உள்ளோம்.

இதற்கிடையே, தையூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங் களுக்கு அந்த இடத்தை ஒதுக்கித் தருமாறு கூறிவருகின்றனர். இடத்தை அவர்கள் ஆக்கிரமிக் காமல் பார்த்துக்கொள்ளும்படி கேளம்பாக்கம் காவல் நிலையத் திலும், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்துள்ளோம். அந்த இடம் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத் துக்குச் சொந்தமானது என்பதால் யாரும் அந்த இடத்தை அப கரித்துக்கொள்ள முடியாது. காவல், வருவாய், பொதுப்பணித் துறைகளின் ஒத்துழைப்புடன் போக் குவரத்து தொழிலாளர்களுக்கான வீட்டுமனைத் திட்டம் நிறைவேற் றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்