கல்லூரியில் சேர்ந்து சில நாட்களில் வெளியேறிய மாணவியின் கல்விக் கட்டணத்தை வட்டியுடன் திருப்பி அளிக்க வேண்டும் என தனியார் பொறியியல் கல்லூரிக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில் ஒவ் வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை தொடங்கும்போதே அந்த கல்வியாண்டுக்கான முழு கட்டணத்தையும் வசூலித்து விடு கின்றனர். இந்நிலையில், மாண வர்கள் வேறு படிப்புக்கு விண்ணப் பித்து அந்த படிப்புக்கு இடம் கிடைத்துவிட்டால், ஏற்கெனவே கட்டணம் செலுத்திய கல்லூரியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அந்தச் சூழலில், மாணவர்கள் வெளியேறினால், அவர்கள் செலுத்திய கட்டணத்தை பல கல்லூரிகள் திருப்பி அளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், திருச்சியைச் சேர்ந்த தமிழ்நாடு நுகர்வோர் பாது காப்பு கவுன்சில் மற்றும் காஞ்சி புரத்தை அடுத்த வெம்பாக்கத்தைச் சேர்ந்த எம்.என்.ராமன் ஆகியோர் செங்கல்பட்டு நுகர்வோர் குறை தீர்மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
இரண்டாவது மனுதாரரான நான், எனது மகளை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 2011 ஜூலை 22-ம் தேதி ரூ.67,000 செலுத்தி பொறியியல் படிப்பில் சேர்த்தேன். வகுப்புகள் தொடங்கிய 6 நாட்களில், எனது மகளுக்கு தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அதன்பிறகு, எனது மகள் பொறியியல் கல்லூரிக்கு செல்லவில்லை.
எனவே, ஓராண்டு கல்வி கட்ட ணமாக செலுத்திய தொகையை திருப்பி அளிக்கும்படி கல்லூரிக்கு கடிதம் அனுப்பினேன். அதற்கு எந்த விதமான விளக்கத்தையும் அளிக் காத கல்லூரி நிர்வாகத்தினர், எனக்கு ரூ.22,000-த்துக்கான காசோலையை மட்டும் அனுப்பி வைத்தனர்.
எனவே, மீதமுள்ள தொகையை திருப்பி அளிக்கவும், மன உளைச் சலுக்கு இழப்பீடாக ரூ.5 ஆயிரம் வழங்கவும் கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த செங் கல்பட்டு நுகர்வோர் குறைதீர்மன்ற தலைவர் கே.சிவானந்தஜோதி, உறுப்பினர்கள் கே.பிரமீளா, டி.பாபு வரதராஜன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
தேசிய நுகர்வோர் ஆணையம் கடந்த 2009-ம் ஆண்டு ஒரு வழக் கில் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘மாணவர்கள் கல்வி நிறுவனங் களில் பயிலாத காலத்துக்கான கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும்’ என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளி யிட்ட பொது அறிவிப்பை சுட்டிக்காட்டியுள்ளது.
யுஜிசி-யின் அந்த அறிவிப்பில், “மாணவர்களின் சேர்க்கையில் காத் திருப்போர் பட்டியலை கல்வி நிறு வனங்கள் வைத்திருக்க வேண்டும். வகுப்புகள் தொடங்குவதற்கு முன் மாணவர்கள் வெளியேறினால் காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவரை சேர்க்க வேண்டும். வெளியேறும் மாணவரிடம் இருந்து பெறப்பட்ட கட்டணத்தில் சேர்க்கை நடைமுறை கட்டணமாக அதிக பட்சம் ரூ.1,000 வரை பிடித்தம் செய்துகொண்டு மீதித் தொகை திருப்பி அளிக்க வேண்டும்.
வகுப்புகள் தொடங்கிய பிறகு ஒரு மாணவர் வெளியேறினால், காலியாக உள்ள அந்த இடத் துக்கு வேறொரு மாணவர் சேர்க்கப் படும்போது, கல்லூரியில் பயின்ற நாட்களுக்கான பிடித்தம் போக மீதி கல்வி கட்டண தொகையை வெளியேறும் மாணவருக்கு திருப்பி அளிக்க வேண்டும்’’ என தெரி விக்கப்பட் டுள்ளது.
இரண்டாவது மனுதாரரின் மகள் 6 நாட்கள் மட்டுமே கல்லூரியில் பயின்றுள்ளார். எனவே, மனுதாரர் கோரிய மீதித் தொகையை 6 சதவீத வட்டியுடன் திருப்பி அளிக்க வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.5,000, வழக்கு செல வாக ரூ.5,000-த்தையும் கல்லூரி நிர்வாகம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago