திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப்பெரு விழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 10-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் பழமை வாய்ந்த வடாரண்யேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. திருத்தணி முருகன் கோயிலுடன் இணைந்த இந்தக் கோயிலில் ஆண்டுதோறும், பங்குனி உத்திரப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர விழா, வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு 8 மணிக்கு உற்சவர் ஸ்ரீசோமாஸ்கந்தர் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தார். தொடர்ந்து பத்து நாட்களுக்கு சந்திர பிரபை, சூரிய பிரபை, அன்ன வாகனம், பூத வாகனம், பல்லக்கு சேவை, நாக வாகனம், மகர வாகனம், மூஷிக வாகனம், மயில், புலி, யானை உள்ளிட்ட வாகனங்களில் உற்சவ மூர்த்திகள் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
10-ம் தேதி பிரசித்தி பெற்ற கமலத் தேர் வீதி உலாவும் 11-ல் திருக்கல்யாணமும் நடக்கிறது. இத்திருவிழாவை ஒட்டி ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago