மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் மாணவர்களை கனவு காணச் சொன்னவர். 2020-ல் இந்தியா வல்லரசு நாடாக விருப்பம் கொண்ட கலாமின் கனவுகளை நனவாக்க அவரது வரலாற்று ஆவணப்படத்தை கட்டணமின்றி திரையிட்டு காட்டி, 2.60 லட்சம் மாணவர்களிடம் கலாமின் கனவுகளை விதைக்கும் பணியை செய்து வருகிறார் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி பட்டதாரி அறிவியல் ஆசிரியர் பெ.தனபால்.
இவர், கிராமப்புற மாணவர்கள் விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளியில் இளம் விஞ்ஞானிகள் குழு அமைத்து, திறன் வெளிப்பாடு, அறிவியல் கண்காட்சி, கருத்தரங்கம், விநாடி-வினா, அறிவியல் நாடகம், ஆய்வுக் கட்டுரை, குறும்படம் தயாரித் தல், களப்பயணம் ஆகியவற்றில் இதுவரை 600-க்கும் மேற்பட்டோரை பங்குபெறச் செய்துள்ளார்.
தனது வழிகாட்டுதல் மூலம் வெள்ளியணை அரசுப் பள்ளியில் மட்டும் 250 மாணவர்களை இளம் விஞ்ஞானிகள் சான்று பெற வைத்துள்ளார்.
கலாமின் கனவுகளை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மனதில் விதைப் பதற்காக கலாம் குறித்த 28 நிமிடங்கள் கொண்ட ஆவணப்படத்தை ஆசிரியர் தனபால் தயாரித்துள்ளார்.
இந்த படத்தில், கலாம் ராமேசுவரத்தில் பிறந்தது முதல் பேக்கரும்பில் நடை பெற்ற இறுதிச் சடங்கு வரை இடம் பெற்றுள்ளன.
ஆசிரியர் தனபால் தனது சொந்த பணத்தில் தயாரித்துள்ள இந்த ஆவணப் படத்தில், அவரது வழிகாட்டுதலால் பல்வேறு அறிவியல் கண்டு பிடிப்புகள் மூலம் இளம் விஞ்ஞானிகள் சான்று பெற்ற 249 மாணவர்களை நடிக்க வைத்துள்ளார்.
இதுகுறித்து ஆசிரியர் பெ.தனபால் கூறியது: நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வற்கான அத்தனை திட்டங்களையும் கலாம் சொல்லியிருக்கிறார். அதற்கான சிறு தூண்டுதலாக இந்த படம் இருக்கும் என நம்புகிறேன்.
இந்த ஆவணப்படத்தை ஆங்கிலத்தில் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். 2020-க்குள் 1 கோடி மாணவர்கள் மனதில் கலாம் கனவுகளை விதைப்பதே தனது லட்சியம் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
28 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago