மதுரை மாநகராட்சி அதிகாரி வீட்டில் நடந்த நூதன கொள்ளை குறித்து மதுரை பதிவெண் கொண்ட பைக் நம்பர் மூலம் துப்பு துலக்கும் முயற்சியில் தனிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை பழங்காநத்தம் திருவள்ளுவர் நகரில் வசிப்பவர் மாநகராட்சி அலுவலர் வீரணன். இவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் காலை இருவர் காரில் வந்தனர். தங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் என, அறிமுகப்படுத்தி கொண்டு, வீரணன் தங்களது ‘கஸ்டடி’ விசாரணையில் இருப்பதாக கூறினர்.
வீரணனிடம் பேச முயன்ற அவரது மனைவி தன லட்சுமி வைத்திருந்த இரு செல்போன் களை அவர்கள் பறித்தனர். வருமானத்துக்கு அதிகமாக பணம், பொருட்கள் வைத்திருப்பதாக வந்த புகாரின்பேரில் விசாரிக்க வந்ததாக கூறியதால் தனலட்சுமி நம்பினார்.
அனைத்து தகவலும் தங்களிடம் உள்ளது என்றும், வீட்டிலுள்ள நகை உள்ளிட்ட பொருள்களை எடுத்து தாருங்கள் எனவும் கேட்டனர். 45 பவுன், ரூ.45 ஆயிரத்தை தனலட்சுமி மூலம் பெற்று, அவரிடம் கையெழுத்து பெற்றனர். இதற்கான ஆவணங்களை வருமானவரித்துறை அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என, கூறிவிட்டு தப்பினர்.
சுப்ரமணியபுரம் போலீஸாரின் விசாரணையில் வீரணன் வீட்டுக்கு வந்த இருவரும் போலி அதிகாரிகள் என தெரியவந்தது. குடியிருப்புகள் மிகுந்த பகுதியில் தனியாக இருந்த தாய், மகளை மிரட்டி பணம், நகைகளை அள்ளிச் சென்ற சம்பவம் மதுரையில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயந்தி தலைமையில் சுப்ரமணியபுரம் காவல் ஆய்வாளர் முருகேசன் உட்பட 2 ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். வீரணன் பற்றி நன்கு தெரிந்த நபர்களே திட்டமிட்டு, அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அவருக்கு நெருக்கமான நபர்கள், எதிரானவர்கள் குறித்து விசாரிக்க துவங்கியுள்ளனர். சமீபத்தில் அவருடன் யாரும் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்திலும் விசாரிக்கின்றனர். இதற்கிடையில் மதுரை நகர் புதிய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று பொறுப்பேற்றார். அவரிடமும் இச்சம்பவம் பற்றி தனிப்படையினர் ஆலோசித்தனர். அவர் சிபிசிஐடி பிரிவில் பணியாற்றிய அனுபவம் மூலம் துப்பு துலக்குவது பற்றி சில ஆலோசனைகளை தனிப் படையினருக்கு வழங்கியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீஸார் கூறியது: காவல்துறை சீருடை யிலும், வடமாநிலத்தை சேந்தவர் போலவும் நடித்து இந்த நூதன கொள்ளை நடந்துள்ளது.
வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்துவது போல இச்சம்பவம் நடந்திருக்கிறது. மதுரை மற்றும் பக்கத்து மாவட்டத்தில் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்கள் பற்றி தகவல் சேகரிக்கப்படுகிறது. வீரணன் நடவடிக்கை பற்றி நன்கு தெரிந்தவர்களே ஈடுபட்டிருக்க முடியும் என நம்புவதால் அந்த கோணத்தில் விசாரிக்கிறோம். வீரணனின் மனைவி பட்டதாரி.
முதலில் சந்தேகித்த அவர், பின்னர் கொள்ளையர்களின் நடவடிக்கையை பார்த்து, வருமானவரித்துறையினராக இருக்கலாம் என நம்பி இருக்கிறார். வீட்டில் இருந்த நகை, பணத்தை மட்டும் வாங்கியவர்கள், தனலட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 20 பவுன் நகையை வாங்கவில்லை. காரணம் அதை பறித்தால் கூச்சல் போடுவார். சிக்கிக்கொள்வோம் என விட்டுச் சென்றுள்ளனர்.
கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் பற்றி ஆய்வு செய்தபோது, அது மதுரை பதிவெண் கொண்ட இரு சக்கர வாகன எண் என, தெரியவந்தது. எனவே, மதுரையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் அல்லது மதுரை நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இருசக்கர வாகன எண் யார் பெயரில் பதிவாகி உள்ளது என விசாரிக்கிறோம். விசாரணையில் முன்னேற்றம் உள்ளது. விரைவில் கொள்ளையர்களை பிடித்து விடு வோம் என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago