‘வரட்டாறை வரட்டு ஓடையாக ஆவணங்களில் மாற்றியுள்ளனர்’: ஆற்றுப்படுகை அருகே விதி மீறி கிணறு வெட்டி பாசனம் - ஓ.பன்னீர்செல்வம் மீது லெட்சுமிபுரம் கிராமத்தினர் புகார்

By பி.டி.ரவிச்சந்திரன்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல் வத்தின் மனைவி விஜயலட்சுமிக்கு சொந்தமான நிலத்தில் விதிமுறை களுக்கு மாறாக கிணறு வெட்டப் பட்டு மின் இணைப்பு பெறப்பட் டுள்ளதாக லெட்சுமிபுரம் கிராம கமிட்டியினர் குற்றம்சாட்டியுள்ள னர். இதற்காக ஆவணங்களை மாற்றிய பொதுப்பணித்துறை அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லெட்சுமிபுரம் ஊராட்சியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜய லட்சுமிக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கிணறு 2016-ல் ஆழப் படுத்தப்பட்டது. இதனால், ஊராட் சியின் பொதுக்கிணறு வற்றி குடி நீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், ‘விஜயலட்சு மிக்கு சொந்தமான நிலத்தில் விதிமுறைகளை மீறி கிணறு வெட்டப்பட்டு, மின் இணைப்பு தரப்பட்டுள்ளதாக’ புகார் எழுந் தது. இது குறித்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் லெட்சுமிபுரத்தைச் சேர்ந்த ரங்க சாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதில், ‘விதிமுறைகளின்படி ஆற்றுப் படுகையில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் அமைந் துள்ள கிணற்றுக்கு மின் இணைப்பு வழங்கக்கூடாது. பிரச் சினைக்குரிய கிணறு ஆற்றுப் படுகையில் இருந்து 15 மீட்டர் தூரத்தில் உள்ளது. இதனால் இந்த கிணற்றுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்’ என மனுவில் தெரிவித்திருந்தார்.

ஆறு ஓடையான கதை

இந்த விதிமீறலை மறைக்க, பொதுப்பணித்துறை அதிகாரி களின் துணையோடு ‘வரட்டாறு’ என்று இருந்ததை ஆவணங்களில் ‘வரட்டு ஓடை’யாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக லெட் சுமிபுரம் கிராம மக்கள் தற்போது குற்றம்சாட்டியுள்ளனர்.

முன்னதாக, கிணறு பிரச் சினை தொடர்பான பேச்சுவார்த் தையின்போது, ‘90 நாட்களுக்குள் கிணறு மற்றும் நிலத்தை பொது மக்கள் வாங்கிக் கொள்ளலாம்’ என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டதாக கிராம கமிட்டியினர் கூறினர்.

இந்நிலையில், பேச்சுவார்த் தைக்கு மாறாக கிணற்றை சுப்புராஜ் என்பவருக்கு ஓபிஎஸ் தரப்பு விற்றுவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் ஏமாற்றமடைந்த கிராம மக்கள் காலவரையற்ற போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

போராட்டத்தின்போது, ‘மெகா கிணறு உள்ள பகுதி அருகே வரட்டாறு செல்கிறது. இதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக, வரட்டு ஓடை என அரசு ஆவணங் களில் பெயர் மாற்றம் செய்துள்ள னர். இதற்குக் காரணமான பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் வலியுறுத்தப்பட்டது.

400 பேர் மீது வழக்கு

இதற்கிடையே, லெட்சுமிபுரத் தில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீ ஸார் அனுமதி தரவில்லை. அனு மதியை மீறி ஊர்மக்கள் ஆர்ப்பாட் டம் நடத்தியதால், அதில் பங்கேற்ற 100 ஆண்கள், 300 பெண்கள் என மொத்தம் 400 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இது, கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிணற்றை ஒப்படைக்க ஓபிஎஸ் முடிவு

லெட்சுமிபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாலன் கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா நேற்று இரவு என்னிடம் பேசினார். "சம்பந்தப்பட்ட கிணற்றை அண்ணன் இலவசமாக தரச் சொல்லிவிட்டார். இரவு அவர் வந்தவுடன் இதை உங்களிடம் தெரிவிப்பார்" என்று கூறினார். இதனால் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கிணற்றை ஊராட்சிக்கு எழுதி வைக்கிறேன் என்றும், தோட்டத்துக்குள் வேறு கிணறு வெட்டப்போவதில்லை எனவும் கூறியுள்ளனர். இரவு ஓ.பன்னீர்செல்வத்திடம் பேசிய பின்பு நல்ல முடிவு கிடைக்கும். போராட்டத்தின்போது ஒற்றுமையாக இருந்து செயல்பட்ட மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

22 hours ago

மேலும்